தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி..! தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு..!
மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல் ஏற்கனவே நடைபெற்ற நிலையில், இன்று தெலங்கானா மாநிலத்தில் ஒரே கட்டமாக இன்று சட்டசபைத் தேர்தல் நடைபெற்று முடிந்தது. இந்நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளன.
அதன்படி தெலுங்கானா ஆந்திர மாநிலத்தில் இருந்து பிரிந்து வந்ததில் இருந்து சந்திரசேகா்ராவ் தலைமையிலான ஆளும் பாரத ராஷ்டிர சமிதி (பி.ஆா்.எஸ்.) கட்சி இரண்டு முறை ஆட்சி செய்து வருகிறது. அங்கு மூன்றாவது முறையாக ஆட்சியை தக்க வைக்க போராடி வருகிறது சந்திரசேகா்ராவ் தலைமையிலான பி.ஆா்.எஸ். கட்சி. பிஆர்எஸ், காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. 2018 இல் பி.ஆா்.எஸ். 119 இடங்களில் 88 இடங்களை வென்றது மற்றும் 47.4 சதவீத வாக்குகளைப் பெற்றது. காங்கிரஸ் 19 இடங்களைப் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்தது.
தற்போதைய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது. அதில் cnn கருத்துக்கணிப்பு படி, தெலுங்கானாவில் ஆளும் பி.ஆா்.எஸ். மற்றும் காங்கிரஸ் இடையே இழுபறி நீடிக்கும் என்பதையே காட்டுகிறது. மேலும் tv9 மற்றும் ஜன் கி பாத், கருத்துக்கணிப்பு படி தெலுங்கானாவில் ஆளும் பி.ஆா்.எஸ். கட்சியை வீழ்த்தி காங்கிரஸ் ஆட்சி அமைக்க வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது.
- cnn-news18 : பி.ஆா்.எஸ்.= 58, காங்கிரஸ்= 56, பாஜக= 10.
- tv9 : பி.ஆா்.எஸ்.= 48 - 58, காங்கிரஸ்= 49 - 59, பாஜக= 05 - 10.
- ஜன் கி பாத் : பி.ஆா்.எஸ்.= 40 -55, காங்கிரஸ்= 48 - 64, பாஜக= 07 -13, எ.ஐ.எம்.ஐ.எம்.= 04 - 07.