முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

Election: வேட்பாளர் பட்டியல் வெளியிட்ட காங்கிரஸ்...! தமிழகத்திற்கு வெளியிடவில்லை....!

05:50 AM Mar 09, 2024 IST | 1newsnationuser2
Advertisement

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதற்கட்டமாக 39 பேர் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. பெங்களூரு ரூரல் மக்களவை தொகுதிக்கு கர்நாடக மாநிலத்தின் துணை முதல்வர் டி.கே சிவகுமாரின் சகோதரர் டி.கே சுரேஷ் காங்கிரஸ் கட்சி சார்பில் களமிறக்கப்பட்டுள்ளார். கடந்த முறை பெரும் நெருக்கடி இருந்த போதே வெற்றி பெற்ற சுரேஷ் இந்த முறை மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆளும் கட்சியாக இருக்கின்றது. வெற்றி வாய்ப்பு எளிதில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

தற்பொழுது நடைபெறும் தேர்தலில் மிக முக்கியமான ஒன்று கேரளாவின் திருவனந்தபுரம் தொகுதி. பாஜக சார்பில் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் களமிறக்கப்பட்டுள்ள நிலையில் காங்கிரஸிலிருந்து சசிதரூர் போட்டியிடுகிறார் இடதுசாரி சார்பிலும் வேட்பாளர் நிறுத்தப்பட உள்ளார். மேலும் சில மாதங்களுக்கு முன்பு தேர்தல் நடைபெற்ற சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆட்சியைப் பறிகொடுத்த முன்னாள் முதல்வர் பூபேஷ் பகேல் அவர்களுக்கு ராஜ்னங்காம் தொகுதியில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கியுள்ளது காங்கிரஸ் கட்சி.

காங்கிரஸ் வெளியிட்டுள்ள முதல் வேட்பாளர் பட்டியலில் தமிழ்நாடு பெயர் இல்லை. நாடாளுமன்ற தேர்தலுக்கான தமிழ்நாட்டின் வேட்பாளர்களுக்கான ஸ்கிரீனிங் கமிட்டி கூட்டம் கூட இன்னும் நடைபெறவில்லை. இதன் காரணமாக வேட்பாளர்களை தேர்வு செய்வதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இம்முறை வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிட மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டது.

Advertisement
Next Article