முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

"இது வெறும் டிரைலர் தான்."! காய் நகர்த்தும் காங்கிரஸ்.! கலக்கத்தில் பாஜக.!

01:20 PM Dec 02, 2023 IST | 1newsnationuser4
Advertisement

ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தலில் 199 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவுகள் முடிந்த நிலையில் நாளை வாக்குகள் என்ன போட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இந்நிலையில் ராஜஸ்தான் தேர்தலுக்கான ரிசார்ட் அரசியலை இப்போதே காங்கிரஸ் தொடங்கிவிட்டது என ராஜஸ்தான் மாநில பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த கிரோதி லால் மீனா குற்றம் சாட்டி இருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisement

ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியிலிருந்து வருகிறது. இந்நிலையில் தேர்தலுக்கு முன்பு நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா என இரண்டு கட்சிகளுக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்ற முடிவு வெளியானது. இதனால் வெற்றி பெற்ற எம்எல்ஏக்களை பாதுகாப்பது அரசியல் கட்சிகளுக்கு மிகப்பெரிய பொறுப்பாக இருக்கிறது.

கடந்த காலங்களில் பிற மாநில காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு பாரதிய ஜனதா கட்சியால் ஆபத்து ஏற்பட்டால் அவர்களை பெங்களூரு அழைத்து வந்து ரிசார்டுகளில் பாதுகாப்பாக தங்க வைத்து அரசியல் சூழ்நிலையை சமாளிப்பதில் கர்நாடக மாநிலத்தின் துணை முதல்வர் டி கே சிவகுமார் எக்ஸ்பர்ட் ஆக இருந்து வருகிறார். தற்போது ராஜஸ்தான் மாநிலத்திலும் இலுப்பறி நிலவும் என்ற சூழ்நிலையில் காங்கிரஸ் அரசு இரண்டு ரிசார்டுகளை தயார் நிலையில் வைத்திருப்பதாக பாரதிய ஜனதா குற்றம் சாட்டியிருக்கிறது.

எனினும் பாரதிய ஜனதா கட்சி 120 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றும் என கிரோதி லால் மீனா நம்பிக்கை தெரிவித்துள்ளார். எனினும் நாளை தேர்தல் முடிவுகள் வெளியாக இருக்கும் நிலையில் பாஜக கட்சிக்கு பயம் ஏற்பட்டுள்ளதால் தான் அவர்கள் இது போன்ற குற்றச்சாட்டுகளை முன் வைத்திருப்பதாக காங்கிரஸ் தர பொது தெரிவித்திருக்கிறது.

Tags :
BJPCONGRESSelectionsResort
Advertisement
Next Article