முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

PMO Modi| "காங்கிரஸ்காரர்கள் இளவரசர்கள்; நான் ஏழையின் மகன்…" ராகுல் காந்தி பேச்சுக்கு பிரதமர் மோடி பதில்.!!

09:12 PM Apr 25, 2024 IST | Mohisha
Advertisement

PMO Modi: 2024 ஆம் வருட பாராளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு இந்தியாவில் நடைபெற்று வருகிறது . தமிழகம் மற்றும் பாண்டிச்சேரி உட்பட 102 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு முதல் கட்டமாக கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கேரளா கர்நாடகா மற்றும் மத்திய பிரதேசம் உட்பட 13 மாநிலங்களில் உள்ள 88 தொகுதிகளில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெற இருக்கிறது.

Advertisement

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள 29 தொகுதிகளுக்கான பாராளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவுகள் நான்கு கட்டங்களாக நடைபெற உள்ளன. இதன் முதல் கெட்ட வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முடிவடைந்த நிலையில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெற இருக்கிறது. இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தில் நேற்று நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி(PMO Modi) தன்னை பற்றி ராகுல் காந்தி பேசிய கீழ் தரமான பேச்சுக்களால் யாரும் கவலைப்பட வேண்டாம் என தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக பேசிய அவர் நாமெல்லாம் தொண்டர்கள் அவர்கள் வாரிசுகள் அப்படித்தான் பேசுவார்கள் என கூறினார். பாஜகவிற்கு தொண்டர்கள் தான் முக்கியம் ஆனால் காங்கிரஸ் வாரிசு அரசியல் எனக் குறிப்பிட்டார். என்னை போன்ற ஏழைத் தாயின் மகன்களுக்கு காங்கிரஸ் கட்சி சுமத்தும் இழிவுகள் புதிதல்ல எனவும் கூறினார். அதனைப் பற்றி யோசித்து மக்கள் யாரும் தங்களது நேரத்தை வீணாக்க வேண்டாம் எனவும் மோடி கேட்டுக் கொண்டார்.

ராகுல் காந்தி மிகவும் கலக்கமாகவும் குழம்பி போய் இருக்கிறார். அவர் என்னைப் பற்றி கூறிய வார்த்தைகளை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம். நான் ஏழை குடும்ப பின்னணியில் இருந்து வந்தவன். இது போன்ற அவமானங்கள் பழகிவிட்டது. அவர்கள் இளவரசர்கள் நம்மை அப்படித்தான் அவமானமாக நடத்துவார்கள் எனக் கூறினார். மதம் மற்றும் ஜாதி குறித்து பேசியதாக பிரதமர் மோடி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரின் மீது தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக பாஜக தலைவர் ஜே.பி நட்டா மற்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே ஆகியோர் ஏப்ரல் 29ஆம் தேதி விளக்கம் அளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Read More: Uttar Pradesh | ‘ஜெய் ஸ்ரீ ராம்’ எழுதினால் பாஸ்.!! உபி பல்கலைக்கழகத்தில் மோசடி.!!

Advertisement
Next Article