For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

காங்கிரஸ் கட்சிக்கு மேலும் பின்னடைவு.! கட்சியிலிருந்து விலகிய முன்னாள் முதல்வர்.!

02:34 PM Feb 12, 2024 IST | 1newsnationuser7
காங்கிரஸ் கட்சிக்கு மேலும் பின்னடைவு   கட்சியிலிருந்து விலகிய முன்னாள் முதல்வர்
Advertisement

மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் பதவிக்காலம் முடிவதை தொடர்ந்து மக்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் வருகின்ற ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் தீவிரமான தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன . மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கூட்டணி அரசு எதிர்த்து காங்கிரஸ் தலைமையில் இந்தியா என்ற மகா கூட்டணி உருவாகி இருக்கிறது.

Advertisement

இந்தக் கூட்டணி உருவான நாளிலிருந்து பல்வேறு சிக்கல்கள் உருவாகி இருக்கிறது. இந்தக் கூட்டணியில் இடம் பெற்றிருந்த ஐக்கிய ஜனதா தளம் கட்சி திடீரென வெளியேறியது. மேலும் ஆம் ஆத்மி மற்றும் திரினாமுல் காங்கிரஸ் கட்சி பஞ்சாப் மற்றும் மேற்கு வங்காளத்தில் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்தது . எனினும் இந்தியா கூட்டணியில் தொடர்வதாக தெரிவித்தன. இது போன்ற சிக்கலான சூழலில் காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி பயணிக்கிறது .

இந்நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு மேலும் சிக்கல் உருவாகி இருக்கிறது. அந்தக் கட்சியின் முக்கிய தலைவர்கள் பலர் கட்சியிலிருந்து விலகி வருகின்றனர். மகாராஷ்டிரா காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களான பாபா சித்திக் மற்றும் மிலிந்த் தியோரா ஆகியோர் விலகிய நிலையில் முன்னாள் முதலமைச்சர் மற்றும் மகாராஷ்டிரா மாநில காங்கிரஸின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான அசோக் சவான் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா காங்கிரஸில் நிலவி வரும் உட்கட்சி பூசலால் அதிருப்தி அடைந்ததாக தெரிவித்த அவர் கட்சியில் இருந்து விலகுவதாக தெரிவித்திருக்கிறார். பாராளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இது போன்ற முக்கிய தலைவர்கள் கட்சியிலிருந்து விலகுவது காங்கிரசிற்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags :
Advertisement