For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

இந்தியா கூட்டணியின் அடிதாங்கியா காங்கிரஸ்.? செயற்குழு கூட்டத்தில் அவசர ஆலோசனை.!

05:16 PM Dec 21, 2023 IST | 1newsnationuser4
இந்தியா கூட்டணியின் அடிதாங்கியா காங்கிரஸ்   செயற்குழு கூட்டத்தில் அவசர ஆலோசனை
Advertisement

தலைநகர் டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் சோனியா காந்தி ராகுல் காந்தி பிரியங்கா காந்தி மற்றும் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட மூத்த தலைவர்களும் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

Advertisement

கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்தியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி கடும் தாக்குதலுக்கு உள்ளானது. இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் தான் மத்திய கட்சி என்றாலும் ஆம் ஆத்மி திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் ராஷ்டிர ஜனதா தளம் போன்ற கட்சிகள் காங்கிரஸ் கட்சியை ஒருவழியாக்கிவிட்டன.

ராகுல் அல்லது பிரியங்கா தான் பிரதமர் என்று பேசிக் கொண்டிருந்த காங்கிரஸ் வாய்களுக்கு இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் கிடைத்த பதிலடி அவர்களை பதற்றத்திற்குள்ளாகி இருக்கிறது. தங்கள் கூட்டணி கட்சிகளே தங்களை கட்டம் கட்டி அடிக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது காங்கிரஸ்.

இந்நிலையில் இந்தியா கூட்டணி பற்றிய ஆலோசனை செய்வதற்கும் தொகுதி பங்கீடு மற்றும் பிரதம வேட்பாளர் குறித்து முடிவு செய்வதற்கும் செயற்குழுவை கூட்டி இருக்கிறது. மேலும் கூட்டணி கட்சிகள் தங்களுக்கு ஒதுக்கும் சீட்டுகளை தான் வாங்கியாக வேண்டுமா.? இல்லை தங்களால் சீட்டுகளை நிர்ணயிக்க முடியுமா.? என்பது தொடர்பாகவும் ஆலோசனை செய்து வருகிறது.

Tags :
Advertisement