வடமாநிலங்களில் 'வாஷ் அவுட்' ஆகிறதா காங்கிரஸ்.? அதிர்ச்சி அளிக்கும் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்.!
இன்று நான்கு மாநில தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல்கள் நடைபெற்றன.
இந்தத் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகும் நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. நடந்து முடிந்த நான்கு சட்டமன்ற தேர்தல்களிலும் தென்னிந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் மட்டுமே காங்கிரஸ் முன்னிலை பெற்று இருக்கிறது.
அவர்கள் ஆட்சியில் இருந்த ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் மிகப்பெரிய தோல்வியை சந்திக்க இருக்கிறது காங்கிரஸ். அந்தக் கட்சி ஆட்சியில் இருந்த ராஜஸ்தான் மாநிலத்தில் தற்போது வரை பாரதிய ஜனதா 108 தொகுதிகளில் முன்னிலை பெற்று இருக்கிறது. இதில் ஏழு தொகுதிகளில் வெற்றியும் பெற்றுள்ளது.
மேலும் சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி உறுதியாக வெற்றி பெறும் என்ற நிலையில் அந்த மாநில தேர்தல் முடிவுகளும் அதிர்ச்சியை அளிக்கிறது. தற்போது வரை பாரதிய ஜனதா கட்சி 51 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல்கள் வருகின்ற 2024 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற இருக்கும் நிலையில் வட இந்தியாவில் காங்கிரஸ் கட்சி வாஸ் அவுட் ஆகி வருவது பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.