For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

'பிரதமர் மோடி பின்னடைவு' வாரணாசி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராய் முன்னிலை..!!

english summary
09:35 AM Jun 04, 2024 IST | Mari Thangam
 பிரதமர் மோடி பின்னடைவு  வாரணாசி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராய் முன்னிலை
Advertisement

வாரணாசி மக்களவை தொகுதியில் மூன்றாவது முறையாக வெற்றி பெறுவாரா பிரதமர் நரேந்திர மோடி இல்லை காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி கிடைக்குமா என்பது இன்னும் சில மணிநேரங்களில் தெரிய வரும்.

Advertisement

நாட்டின் 18ஆவது மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்றது. ஏப்ரல் 19ஆம் தேதி முதல்கட்டத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், 44 நாட்களில் அடுத்தடுத்த கட்டங்களாக வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. 10 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி மையங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. மொத்தமுள்ள 543 தொகுதிகளில், குஜராத் மாநிலம் சூரத்தில் மட்டும் பாஜக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

மீதமுள்ள 542 தொகுதிகளில் பாஜக கூட்டணி, I.N.D.I.A. கூட்டணி வேட்பாளர்கள் மற்றும் பிறக்கட்சியைச் சேர்ந்தவர்கள் களம் கண்டனர். முதல்கட்டத்தேர்தலில் 66.1 சதவிகிதம், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டத் தேர்தலில் முறையே 66 புள்ளி 7 மற்றும் 61 சதவிகித வாக்குகள் பதிவாகின. இதேபோல் நான்கு, ஐந்து மற்றும் ஆறாம் கட்டத் தேர்தலில் 67.3, 60.5, 63.4 சதவிகித வாக்குகள் பதிவாகின.

கடைசி கட்டத் தேர்தலில் 62 சதவிகித வாக்குகள் பதிவானதாக தெரிவிக்கப்பட்டது. தேசத்தில் மொத்தம் நாட்டில் வாக்களிக்க தகுதியுடைய சுமார் 97 கோடி பேரில், 64 கோடியே 20 லட்சம் பேர் ஜனநாயக கடமையாற்றியதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.

இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலத்தில் இருக்கும் வாரணாசி மக்களவை தொகுதியில் மூன்றாவது முறையாக பாஜக சார்பில் பிரதமர் மோடி போட்டியிட்டார். அந்த தொகுதியில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களில் 36 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து வாரணாசியில் மோடி உள்பட 7 போட்டியாளர்கள் களத்தில் இருக்கிறார்கள்.

இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி பின்னடைவை சந்தித்துள்ளார். அவரை எதிர்த்து களம் கண்ட அஜய் ராய் முன்னிலை வகித்து வருகிறார். தொடர்ந்து இரண்டு முறை வாரணாசி தொகுதியில் வெற்றி பெற்ற பிரதமர் மோடி, தற்போதைய நிலவர படி 6000 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னனியில் இருந்து வருகிறார்.

Tags :
Advertisement