"எனக்கு எதிராக 'Vote Jihad' செய்ய காங்கிரஸ் மக்களை தூண்டுகிறது.." பிரதமர் மோடி குற்றச்சாட்டு.!!
Vote Jihad: 2024 ஆம் வருட பாராளுமன்ற தேர்தல் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. 7 கட்டங்களாக நடைபெற்று வரும் பாராளுமன்ற தேர்தலில் மூன்றாம் கட்ட வாக்குப் பதிவுகள் இன்று நடைபெற்று வருகின்றன. இதனைத் தொடர்ந்து வருகின்ற மே 13ஆம் தேதி நான்காம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.
இந்த வாக்குப்பதிவு மத்திய பிரதேசம் உத்திர பிரதேசம் பீகார் ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற உள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள 29 பாராளுமன்ற தொகுதிகளில் 8 தொகுதிகளுக்கான பாராளுமன்றத் தேர்தல் வருகின்ற மே மாதம் 13-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிரமான வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மத்திய பிரதேசத்தின் கார்கோனில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி காங்கிரஸ் கட்சி தனக்கு எதிராக Vote Jihad செய்ய மக்களை அழைக்கிறது என குற்றம் சாட்டியிருக்கிறார். மேலும் எல்லையில் பாகிஸ்தான் இந்தியாவிற்கு எதிராக ஜிகாத் செய்கிறது. நாட்டிற்குள் காங்கிரஸ் எனக்கு எதிராக ஓட்டு ஜிகாதிற்கு அழைப்பு விடுக்கிறது என குற்றம் சாட்டி இருக்கிறார்.
மேலும் ஒரு குறிப்பிட்ட மதத்தினரை எனக்கு எதிராகவும் பாஜகவிற்கு எதிராகவும் வாக்களிக்க காங்கிரஸ் தூண்டுகிறது. இதிலிருந்து காங்கிரஸ் கட்சியின் கெட்ட எண்ணத்தை மக்கள் புரிந்து கொள்ளலாம். ஒரு தலைவர் மும்பை தீவிரவாத தாக்குதலை பாகிஸ்தான் செய்யவில்லை எனக் கூறுகிறார். மற்றொருவர் பாகிஸ்தான் வளையல்கள் அணிந்திருக்கவில்லை என பேட்டி கொடுக்கிறார். இது போன்ற அபாயகரமான எண்ணங்களுடன் காங்கிரஸ் தலைவர்கள் செயல்படுவதாகவும் தனது பொதுக் கூட்டத்தில் மோடி தெரிவித்தார்.