"ராகுலும் மோடியும் ஒண்ணா.?.." புதிய சர்ச்சையில் சிக்கிய கார்த்தி சிதம்பரம்.! விளக்கம் கேட்டு நோட்டீஸ்.!
காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக இருப்பவர் கார்த்திக் சிதம்பரம். இவர் முன்னாள் நிதியமைச்சர் மற்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான பா.சிதம்பரத்தின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை சமூக வலைதளங்களிலும் பொதுவெளியிலும் இவர் கூறி வருவது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது . தற்போது பிரதமர் நரேந்திர மோடியுடன் ராகுல் காந்தியை பற்றி இவரளித்த பேட்டி காங்கிரஸ் கட்சியில் கடும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
கார்த்திக் சிதம்பரம் கட்சியில் சேர்ந்த நாள் முதல் தினமும் ஒரு சர்ச்சையை ஏற்படுத்துவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார். தனது ஆதரவாளர்களுடன் தன்னிச்சையாக செயல்படுவது மற்றும் புது தளங்களில் தனது கட்சியினரையே விமர்சிப்பது என இது தொடர்ந்து வருகிறது. கட்சி தேர்தல்களில் தோல்வியை சந்திக்கும்போது சமூக வலைதளங்களில் நெட் பிலிக்ஸ் மற்றும் வீடியோ கேம் போன்றவற்றைப் பற்றிய பதிவுகளை பகிர்ந்து தனது சொந்த கட்சிக்காரர்களையே கலாய்த்து வருபவர் இவர்.
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பிரதமர் மோடியுடன் ஒப்பிடும்போது ராகுல் காந்தி அவருக்கு நிகரான தலைவர் இல்லை என தெரிவித்திருக்கிறார். மேலும் பிரதமர் நரேந்திர மோடியை பற்றி புகழ்ந்து பேசியிருக்கிறார். ராகுல் காந்தி தொடர்பாக இவர் பேசிய கருத்து தமிழக காங்கிரஸ் கமிட்டியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனைத் தொடர்ந்து ராகுல் காந்தி பற்றிய பேச்சிற்கு கார்த்திக் சிதம்பரம் பதிலளிக்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பாக அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது. ஏற்கனவே காங்கிரஸ் கட்சி வலுவிழந்து கொண்டிருக்கும் நிலையில் இது போன்ற சர்ச்சைகள் அந்த கட்சி மேலும் பின்னடைவை ஏற்படுத்த வழி வகுக்கும் என அரசியல் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்