பெண்ணின் சொந்தக்காரர்களால் குழப்பம்..!! ஜப்பானில் தடபுடலாக நடந்த நெப்போலியன் மகன் கல்யாணம்..!!
ஜப்பானில் நெப்போலியனின் மகன் தனுஷின் திருமணம் நேற்று காலை 8 மணி கோலகலமாக நடைபெற்றது. இந்த திருமண விழாவில் சரத்குமார், ராதிகா, சுஹாசினி, குஷ்பு, மீனா, கார்த்தி, கலா மாஸ்டர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
தடபுடலாக நடந்த இந்த திருமணம் குறித்து பயில்வான் ரங்கநாதன் வீடியோவில் பேசி உள்ளார். ”தனுஷூக்கு ஜப்பானை பார்க்க வேண்டும் என்று நீண்ட நாள் ஆசையாம். இதனால், இவர் முதலில் ஜப்பானை சுற்றிபார்க்கத்தான் முடிவு செய்திருக்கிறார்கள். இதற்கிடையே, தனுஷூக்கு திருமணம் முடிவு செய்யப்பட்டதால், தனது திருமணத்தை ஜப்பானில் நடத்த வேண்டும் என தனுஷ் ஆசைப்பட்டுள்ளார். அந்த ஆசையை நெப்போலியன் நிறைவேற்றியுள்ளார்.
மகனின் திருமணத்தை ஜப்பானே திக்குமுக்காடும் அளவிற்கு நடத்தி விட்டார் நெப்போலியன். திருமணம் தமிழ்நாட்டில் நடந்திருந்தால், எப்படி நடிகர்கள் வருவார்களோ அதே போல பல நடிகர் இரண்டு நாட்களுக்கு முன்பே ஜப்பான் சென்றுவிட்டனர். அவர்கள் அனைவருக்கும் ஸ்டார் ஓட்டலில் அறை எடுத்து தங்க வைத்துள்ளார். அவர்களுக்கு இந்திய உணவில் எந்த குறையும் வந்துவிடக்கூடாது என்பதற்காக ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்துள்ளார் நெப்போலியன்.
திருமண வீடியோவை பார்த்த பலர், பல கேள்விகளை கேட்கின்றனர். அவரால் இல்லற வாழ்க்கையில் ஈடுபட முடியாது என்கிறார்கள். ஆனால், தன்னை நம்பி வரும் ஒரு பெண்ணை தனுஷ் நிச்சயம் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று தான் நினைப்பார். அப்படி இல்லற வாழ்க்கைக்கு தகுதி இல்லாமல் இருந்திருந்தால், அவருக்கு எப்படி திருமண ஆசை வந்திருக்கும். அதுமட்டுமின்றி, அக்ஷயாவும் தனுஷூம் மனம்விட்டு பேசியிருக்கிறார்கள். இதனால் ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்து கொண்டு இருக்கிறார்கள் என்றார்.
மணப்பெண் அக்ஷயா, நெப்போலியனின் உறவுக்கார பெண்தான். ஏழ்மையான குடும்பம் என்பதால் தான் இதுபோன்ற ஒரு தியாகத்தை அந்த பெண் செய்திருக்கிறார். திருமணத்தில் உறவினர்களால் ஏதாவது குழப்பம் வந்துவிடக்கூடாது என்பதற்கான பெண்ணின் சொந்தங்கள் யாரும் வரவில்லை. பெண்ணின் பெற்றோர் மட்டுமே திருமணத்தில் கலந்து கொண்டுள்ளனர். உண்மையில் அந்த பெண்ணுக்கு பெரிய மனசு வேண்டும். நிச்சயம் நெப்போலியன் அந்த பெண்ணின் குடும்பத்திற்கு சொத்துபத்து கொடுத்து நன்றாக பார்த்துக்கொள்வார்” என்று பயில்வான் ரங்கநாதன் பேசியுள்ளார்.
Read More : ஜிம்மில் பெண்களுக்கு ஆண் பயிற்சியாளர்கள் பயிற்சி அளிக்க தடை..!! ஆண் டெய்லர்களுக்கும் தடை..!!