For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

பிரதமர் மோடி இரங்கல்!… ஆர்.எம்.வீரப்பன் மறைவு வேதனை அளிக்கிறது!

06:59 AM Apr 10, 2024 IST | Kokila
பிரதமர் மோடி இரங்கல் … ஆர் எம் வீரப்பன் மறைவு வேதனை அளிக்கிறது
Advertisement

R.M.Veerappan: வயது மூப்பு, உடல்நலக் குறைவால் காலமான முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

Advertisement

உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் செவ்வாய்க்கிழமை காலமானார். அவருக்கு வயது 98.

தமிழகத்தில் மூத்த திராவிட அரசியல் தலைவர்களில் ஆர்.எம்.வீரப்பன் முக்கியமானவர். மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில், அவரது அமைச்சரவையில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சராக இருந்தவர். அதேபோல், மறைந்த முதல்வர்களான ஜானகி மற்றும் ஜெயலலிதா ஆகியோரது அமைச்சரவைகளிலும் அமைச்சராக இருந்தவர் ஆர்.எம்.வீரப்பன்.

அதிமுகவில் இருந்தாலும், திமுக தலைவரான கருணாநிதி மற்றும் திமுகவைச் சேர்ந்த தலைவர்கள் உடனும் நட்பில் இருந்தவர் ஆர்.எம்.வீரப்பன். அதிமுகவில் இருந்து விலகிய பிறகு எம்ஜிஆர் கழகம் என்ற கட்சியைத் தொடங்கியவர் ஆர்.எம்.வீரப்பன். திரைத் துறையில் எம்ஜிஆருக்கு வலதுகரமாக இருந்த ஆர்.எம்.வீரப்பன், சத்யா மூவிஸ் நிறுனத்தை தொடங்கி பல திரைப்படங்களை தயாரித்தவர் ஆர்.எம்.வீரப்பன்.

இந்தநிலையில், வயது மூப்பின் காரணமாக ஏற்பட்ட உடல்நலக் குறைவால் ஆர்.எம்.வீரப்பன், சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக கடந்த சில தினங்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று பகல் அவர் காலமானார். அவருக்கு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள், திரை உலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில், ஆர்.எம். வீரப்பனின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில், "ஆர்.எம்.வீரப்பனின் மறைவு வேதனை அளிக்கிறது. எம்.ஜி.ஆரின் கொள்கைகளை பிரபலப்படுத்தியதற்காகவும், பொதுச் சேவையில் அவர் ஆற்றிய பங்களிப்பிற்காகவும் அவர் நினைவுகூரப்படுவார். திரைப்பட உலகில் சுறுசுறுப்பான பங்கும் அவர் வகித்தவர். அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் எனது இரங்கல்கள்" என்று பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.

Readmore: பெண்ணுக்கு கிஸ் அடித்த பாஜக எம்.பி.!… இதுதான் மோடியின் குடும்பமா?… எதிர்க்கட்சிகள் விமர்சனம்!

Advertisement