For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

surrogate mother: இனி வாடகைத்தாய் முறையை பயன்படுத்த நிபந்தனை!... கணவன் - மனைவிகளுக்கு புதிய விதிமுறை!

10:04 AM Feb 24, 2024 IST | 1newsnationuser3
surrogate mother  இனி வாடகைத்தாய் முறையை பயன்படுத்த நிபந்தனை     கணவன்   மனைவிகளுக்கு புதிய விதிமுறை
Advertisement

surrogate mother: கணவன்-மனைவி இருவருக்குமே குழந்தையை உருவாக்க முடியாத குறைபாடு இருந்தால், அவர்கள் வாடகைத்தாய் முறையை பயன்படுத்த முடியாது என்ற புதிய விதிமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

கணவன்-மனைவி இருவரில் யாருக்காவது குழந்தை பெற முடியாத குறைபாடு இருந்தால், வாடகைத்தாய் முறையில் குழந்தை பெற்றுக்கொள்ள சட்டம் அனுமதிக்கிறது. தற்போது அமலில் உள்ள வாடகைத்தாய் விதிமுறைகள், 2022-ம் ஆண்டு கொண்டுவரப்பட்டன. இந்நிலையில், அவற்றில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்துள்ளது. திருத்தப்பட்ட புதிய விதிமுறைகளை நேற்று அறிவிப்பாணையாக வெளியிட்டது.

அதில், வாடகைத்தாய் முறையில் பிறக்கப்போகும் குழந்தை, அதன் தந்தையின் உயிரணுவையோ அல்லது தாயின் கருமுட்டையையோ கொண்டிருக்க வேண்டும். அந்த நிபந்தனையுடன்தான் வாடகைத்தாய் முறையை பயன்படுத்த அனுமதி அளிக்கப்படும். அதாவது, கணவன்-மனைவி இருவருக்குமே குழந்தையை உருவாக்க முடியாத குறைபாடு இருந்தால், அவர்கள் வாடகைத்தாய் முறையை பயன்படுத்த முடியாது. யாராவது ஒருவருக்கு மட்டும் குறைபாடு இருந்தால்தான், அந்த முறையை பயன்படுத்த முடியும்.

கணவன்-மனைவி இருவரில் யாராவது ஒருவருக்கு மட்டும் குறைபாடு இருப்பதாக மாவட்ட மருத்துவ வாரியம் சான்றளிக்க வேண்டும். அதன்பிறகுதான் உயிரணுவையோ அல்லது கருமுட்டையையோ தானமாக பெற முடியும். ஒரு பெண், விதவையாகவோ அல்லது விவாகரத்து ஆனவராகவோ இருந்தால், அவரது சொந்த கருமுட்டையையும், தானமாக பெறப்பட்ட உயிரணுவையும் பயன்படுத்தித்தான் வாடகைத்தாய் முறைக்கு செல்ல முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

English Summary: A new rule has been announced that if both husband and wife have a disability that makes it impossible for them to produce a child, they cannot use the surrogate mother system.

Readmore:கணக்குகளுக்கு ஆப்பு..!! 1ஆம் தேதி முதல் செயல்படாது..!! கூகுள் நிறுவனம் அதிரடி..!! காரணம் இதுதான்..!!

Tags :
Advertisement