காவல்துறையின் நிபந்தனை!. தள்ளிப்போகிறதா மாநாடு!. முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறார் விஜய்!.
TVK: தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு நடத்தப்படும் தேதியை இன்று விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய்யின் புதிய அரசியல் கட்சியான தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் செப்டம்பர் 23ஆம் தேதி நடைபெறும் என கூறப்பட்டது. இதற்கு அனுமதி கேட்டு, அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த், விக்கிரவாண்டி காவல்துறையிடம் கடிதம் வழங்கியிருந்தார். இதையடுத்து காவல்துறை தவெகவிடம் 21 கேள்விகளை எழுப்பி விளக்கம் கேட்டிருந்தது. மேலும் 5 நாட்கள் அவகாசமும் வழங்கியிருந்தது. இதற்கு பதிலளித்த தமிழக வெற்றி கழகம் கட்சியினர், மாநாடு நடத்துவதற்கு முழு வீச்சில் தயாராகினர்.
இதையடுத்து, தவெகவின் விளக்கத்திற்கு பிறகு, 33 நிபந்தனைகளுடன் காவல்துறை அனுமதி அளித்தனர். ஆனால் காவல்துறை தரப்பில் அனுமதி அளிக்க தாமதமானதால், மாநாடுக்கு தயார் செய்வதிலும் காவல்துறையின் நிபந்தனைகளை நிறைவேற்றுவதிலும் போதிய கால அவகாசம் இல்லாததால், தவெகவின் முதல் மாநாடு தள்ளிப்போகும் என தகவல் கிடைத்துள்ளது. இந்த நிலையில், தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு நடைபெறும் தேதியை இன்று விஜய் அறிவிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.
Readmore: பால் முதல் அரிசி வரை..!! திருமணமான பெண்களே நோட் பண்ணிக்கோங்க..!! நீண்ட ஆயுள் கிடைக்குமாம்..!!