இணையத்தில் வைரலான பழைய வீடியோ...! திமுகவுக்கு சிக்கலை இழுத்து விட்ட தயாநிதி மாறன்...!
உத்தரபிரதேசம் மற்றும் பீகாரில் இருந்து தமிழ்நாட்டிற்கு வரும் ஹிந்தி பேசுபவர்கள் குறித்து திமுக எம்பி தயாநிதி மாறன் கூறியதற்கு கண்டனம் தெரிவித்த தேஜஸ்வி யாதவ், பீகார் மக்கள் இல்லாமல் பிற மாநிலங்களில் உள்ளவர்கள் செயல்படாமல் இருந்தால் ஸ்தம்பித்துவிடும் என்றார்.
உத்தர பிரதேசம், பிஹார் மாநிலங்களை சேர்ந்த இந்தி பேசும் மக்கள் பற்றி திமுக எம்.பி. தயாநிதி மாறன் விமர்சித்து பேசும் வீடியோவை பாஜக தலைவர்கள் சமூக ஊடகங்களில் வெளியிட்டு, இதற்கு நிதிஷ்குமார், லாலுபிரசாத் யாதவ் போன்ற இண்டியா கூட்டணி தலைவர்களின் கருத்தை கேட்டுள்ளனர்.
தயாநிதி மாறன் பேசும் அந்த வீடியோவில்; ஆங்கிலம் தெரிந்தவர்கள் ஐ.டி. நிறுவனங்களில் நல்ல சம்பளத்துக்கு வேலைக்கு செல்கின்றனர். ஆனால் சிலர் இந்தி, இந்தி என கூறுகின்றனர். உ.பி மற்றும் பிஹாரில் இந்தியை மட்டும் கற்றவர்கள் தமிழ்நாட்டுக்கு கட்டிடங்கள் கட்டவும், கழிவறைகளை சுத்தம் செய்யவும் தான் வருகின்றனர். இந்தியை மட்டும் கற்றால் இதுதான் நிலைமை என பேசிய பழைய வீடியோ வைரலாக பரவி வருகிறது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ்; உ.பி., பீகார் மாநில மக்கள் குறித்து, அக்கட்சியின் தலைவர்கள் ஏதாவது பேசியிருந்தால், அது கண்டிக்கத்தக்கது. அதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. உ.பி மற்றும் பீகாரில் இருந்து வரும் தொழிலாளர்கள் நாடு முழுவதும் தேவைப்படுகின்றனர். அவர்கள் வேறு இடங்களுக்கு செல்வதை நிறுத்தினால், மாநிலங்கள் செயல்படுவதை நிறுத்தி ஸ்தம்பிக்கும்.
"குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் சாக்கடைகளை சுத்தம் செய்கிறார்கள் என்று அவர் கூறியிருந்தால், அது அர்த்தமுள்ளதாக இருக்கும். ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஏன் சுத்தம் செய்ய வேண்டும்..? ஆனால் பீகார் மற்றும் உ.பி. மக்கள் சாக்கடைகளை சுத்தம் செய்ய வருவதாக அவர் கூறுகிறார். தயாநிதி மாறனின் அந்த பேச்சு கண்டிக்கத்தக்கது... அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும் இதுபோன்ற அறிக்கைகளை வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்றார்.