For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

3 ஆண்டு ஒரே இடத்தில் பணி...! இன்று மாலை 5 மணி வரை டைம்... பட்டியல் அனுப்ப அதிரடி உத்தரவு...!

Compulsory transfer of officers who have been serving in the same place for 3 years
05:55 AM Jul 05, 2024 IST | Vignesh
3 ஆண்டு ஒரே இடத்தில் பணி     இன்று மாலை 5 மணி வரை டைம்    பட்டியல் அனுப்ப அதிரடி உத்தரவு
Advertisement

3 ஆண்டு ஒரே இடத்தில் பணிபுரியும் அலுவலர்களை கட்டாய இடமாறுதல்... இன்று மாலைக்குள் பட்டியல் அனுப்ப பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து பள்ளிக் கல்வி இயக்குநர் அனைத்து மாவட்ட அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்; பள்ளிக்கல்வித் துறையில் அனைத்துவித இயக்குநரகங்கள், அலுவலகங்களின் நிர்வாகம் திறம்பட செயல்பட வேண்டியது அவசியமாகும். அதில் பணிபுரியும் பணியாளர்கள் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே அலுவலகத்தில், பணியிடத்தில் இல்லாமல் அவர்களை மாறுதல் செய்யவும்,விருப்ப மாறுதல் ஆண்டுதோறும் நடத்தவும் தமிழக அரசால் உத்தரவிடப்பட்டு வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டன.

Advertisement

அதன்படி பள்ளிக்கல்வி அலுவலகங்கள், ஆசிரியர் தேர்வு வாரியம், இயக்குநரகங்கள் மற்றும் அரசுப் பள்ளிகளில் கடந்த ஜூன் 30-ம் தேதி நிலவரப்படி 3 ஆண்டுகளுக்கு மேல் நேர்முக உதவியாளர், கண்காணிப்பாளர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் உட்பட பணியிடங்களில் வேலை செய்பவர்களின் பட்டியலை கணக்கெடுக்க வேண்டும்.

அந்த விவரங்களை பட்டியலாக தயாரித்து இன்று மாலை 5 மணிக்குள் அனுப்பிவைக்க வேண்டும். எந்த விவரங்களும் விடுபடாமல் முழுமையான வகையில் அறிக்கையை சமர்பிக்க அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement