For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

பள்ளிகளில் கட்டாய தேர்ச்சி முறை ரத்து..!! தமிழ்நாடு அரசின் முடிவு என்ன..? மத்திய அரசின் இந்த பாயிண்டை கவனிச்சீங்களா..?

The Union Ministry of Education has issued a government order abolishing the compulsory passing system for 5th and 8th grade students in schools.
04:27 PM Dec 24, 2024 IST | Chella
பள்ளிகளில் கட்டாய தேர்ச்சி முறை ரத்து     தமிழ்நாடு அரசின் முடிவு என்ன    மத்திய அரசின் இந்த பாயிண்டை கவனிச்சீங்களா
Advertisement

பள்ளிகளில் 5, 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாய தேர்ச்சி முறையை ரத்து செய்து மத்திய கல்வி அமைச்சகம் அரசாணை வெளியிட்டது. இந்த புதிய விதியானது மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் கேந்திரிய வித்யாலயா, நவோதயா வித்யாலயா மற்றும் சைனிக் பள்ளிகள் உட்பட 3,000-க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த விஷயத்தில் ஒவ்வொரு மாநிலமும் அதன் சொந்த அணுகுமுறையை தேர்வு செய்யலாம் என்று கூறியுள்ளது.

Advertisement

அந்த வகையில், ஆந்திரா, அருணாச்சலப் பிரதேசம், சத்தீஸ்கர், கோவா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் 5, 8ஆம் வகுப்புகளில் தோல்வியடைந்த மாணவர்கள் மேல் வகுப்புகளுக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், கடந்த 2010இல் கொண்டு வரப்பட்ட இலவச கட்டாயக் கல்வி உரிமைச்சட்டப்படி, 1 கிமீ தொலைவுக்குள் அனைத்துக் குழந்தைகளுக்கும் தொடக்கக் கல்வி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். ஆனால், தற்போது மாற்றியமைக்கப்பட்டுள்ள மேற்கண்ட விதிகளுக்கு நாடு முழுவதும் கல்வியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஆனால், தமிழ்நாடு, அசாம், ஜம்மு-காஷ்மீர், ஜார்கண்ட், மத்தியப் பிரதேசம், மேகாலயா, நாகாலாந்து, ராஜஸ்தான், சிக்கிம், திரிபுரா, உத்தரகண்ட், பஞ்சாப், பீகார், குஜராத், இமாச்சலப் பிரதேசம், மேற்குவங்கம் ஆகிய 16 மாநிலங்கள், டாமன் மற்றும் டையூ, தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி ஆகிய யூனியன் பிரதேசங்கள், ஏற்கனவே 1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான 'ஆல்பாஸ்' திட்டத்தை நடைமுறையில் வைத்துள்ளன.

அதே சமயம் ஆந்திரா, அருணாச்சலப் பிரதேசம், மணிப்பூர், மிசோம், ஒடிசா, தெலங்கானா, சத்தீஸ்கர், கோவா, கர்நாடகா, உத்தரப்பிரதேசம், டெல்லி, கேரளா, மகாராஷ்டிரா, அந்தமான் நிக்கோபார் தீவுகள், சண்டிகர், லடாக் மற்றும் லட்சத்தீவு உள்ளிட்ட மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் 5 - 8ஆம் வகுப்பு வரை மாணவர்களின் தேர்ச்சி முறையை பின்பற்றி வருகின்றன.

இதுகுறித்து மத்திய கல்வி அமைச்ச அதிகாரிகள் கூறுகையில், “மத்திய அரசின் கீழ் செயல்படும் கேந்திரிய வித்யாலயா, ஜவஹர் நவோதயா வித்யாலயா, சைனிக் பள்ளிகள், யூனியன் பிரதேசங்களில் செயல்படும் சிபிஎஸ்இ பள்ளிகளில் 5, 8ஆம் வகுப்பு வரையிலான கட்டாய தேர்ச்சி ரத்து செய்யப்படும். மாநில அளவில் செயல்படும் சிபிஎஸ்இ பள்ளிகள், அந்தந்த மாநில அரசுகளின் முடிவுகளுக்கு ஏற்ப செயல்படலாம் என்று தெரிவித்துள்ளனர்.

உதாரணத்திற்கு உ.பி. மாநிலம் நொய்டாவில் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகள், மாணவர்களின் தேர்ச்சி முறையை நடைமுறைப்படுத்தும். அதேநேரம் குஜராத் சிபிஎஸ்ஐ பள்ளிகள் ஆல்பாஸ் திட்டத்தை அமல்படுத்தும் அல்லது அந்தந்த மாநில அரசுகளின் விருப்பத்திற்கு ஏற்ப செயல்படுத்தும். எனவே, 5 மற்றும் 8ஆம் வகுப்பு வரையிலான கட்டாய தேர்ச்சி முறை ரத்து செய்யப்பட்டதை அந்தந்த மாநில சிபிஎஸ்ஐ பள்ளிகள் எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றன என்பது, அந்தந்த மாநில அரசுகளின் முடிவுக்கு உட்பட்டது” என்று தெரிவித்துள்ளனர்.

Read More : ”ஹமாஸ் தலைவரை கொன்றது நாங்கள்தான்”..!! பகிரங்கமாக அறிவித்த இஸ்ரேல்..!!

Tags :
Advertisement