For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

தலையணையால் அமுக்கி கொலை..!! வெவ்வேறு இடங்களில் கிடந்த உடல் பாகங்கள்..!! எம்பி வழக்கில் திடீர் திருப்பம்..!!

Bangladeshi MP Anwarul Azeem, who came to India for treatment, was smothered to death with a pillow, it has been revealed.
05:04 PM Jun 13, 2024 IST | Chella
தலையணையால் அமுக்கி கொலை     வெவ்வேறு இடங்களில் கிடந்த உடல் பாகங்கள்     எம்பி வழக்கில் திடீர் திருப்பம்
Advertisement

இந்தியாவுக்கு சிகிச்சைக்காக வந்த வங்கதேச நாட்டின் எம்பி அன்வருல் அசீம் தலையணையால் அமுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது அம்பலமாகியுள்ளது.

Advertisement

வங்கதேச எம்பியான அன்வருல் அசீம், கொல்கத்தாவில் உள்ள நரம்பியல் மருத்துவரிடம் சிகிச்சை பெறுவதற்காக இந்தியா வந்துள்ளார். கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி முதல் அவரை காணவில்லை. இதனையடுத்து, வழக்குப்பதிவு செய்து இருநாட்டு போலீசாரும் தீவிரமாக தேடி வந்தனர். அப்போது, அவர் கொல்கத்தாவில் உள்ள ஒரு குடியிருப்பில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது.

விசாரணைக்கு பிறகு வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் தான் இந்த கொலையை செய்தனர் என்பதும், அவர் துண்டு துண்டாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டதும் தெரிய வந்தது. மேலும், அசிம் அனாரின் நெருங்கிய நண்பரான அக்தருஸ்ஸாமான் தான் இந்த கொலையை செய்ய சொல்லி கூலிப்படையினருக்கு ரூ.5 கோடி கொடுத்ததும் விசாரணையில் அம்பலமானது.

பின்னர் இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான முகமது ஷியாம் ஹூசேனை கைது செய்து இந்தியாவுக்கு நாடு கடத்தினர். இந்நிலையில், வங்கதேச எம்பி, தலையணையால் அமுக்கி மூச்சடக்கி கொல்லப்பட்டது தெரியவந்துள்ளது. குற்றாவாளி முகமது ஷியாமின் கூற்றுப்படி, அறையில் நுழைந்தவுடன் அன்வருல் அசீமை தலையணையால் அமுக்கி, கழுத்தை நெரித்து கொன்றுள்ளனர். பின்னர் அவரின் உடல் பாகங்களை துண்டு துண்டாக வெட்டி பிளாஸ்டிக் கவர்களில் போட்டுள்ளனர்.

அதனை நியூ டவுன் பகுதி மற்றும் பாக்ஜோலா கால்வாயின் பல்வேறு பகுதிகளில் வீசிச் சென்றுள்ளனர். ஒரு சில உடல் பாகங்களை டிராலி சூட்கேஸில் எடுத்துச் சென்று மேற்கு வங்கத்தின் பாங்கான் எல்லைக்கு அருகிலும் வீசிவிட்டு வெவ்வேறு இடங்களுக்கு தப்பி சென்றுள்ளனர். இந்த கொலைக்கு ஒரு பெண் உதவி செய்ததும், அவர் அக்தருஸ்ஸாமானின் காதலி எனவும் தெரியவந்துள்ளது.

Read More : ஷாக்கிங் நியூஸ்..!! இனி செல்போன் எண்ணுக்கு கட்டணம்..!! அரசுக்கு பரிந்துரை செய்த டிராய்..!!

Tags :
Advertisement