For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

டிசம்பர் முடிவதற்குள் இந்த 2 முக்கிய வேலையை முடிச்சிருங்க..!! இல்லையென்றால் சிக்கல் உங்களுக்குத்தான்..!!

Aadhaar 2 key tasks must be completed by the last date of December (December 31).
10:17 AM Dec 10, 2024 IST | Chella
டிசம்பர் முடிவதற்குள் இந்த 2 முக்கிய வேலையை முடிச்சிருங்க     இல்லையென்றால் சிக்கல் உங்களுக்குத்தான்
Advertisement

டிசம்பர் மாதத்தின் கடைசி தேதி (டிசம்பர் 31) முடிவதற்குள் ஆதார் 2 முக்கிய பணிகளை முடித்தாக வேண்டும்.

Advertisement

பான் - ஆதார் இணைப்பு :

டிசம்பர் 31ஆம் தேதிக்குள் ஆதார் கார்டை பான் கார்டுடன் இணைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுவும் ஆதார் உடன் பான் கார்டை இணைப்பதன் மூலம் பான் கார்டை வைத்துச் செய்யப்படும் முறைகேடுகள் தடுக்கப்படும். அதேசமயம் உங்கள் ஆதார் மற்றும் பான் கார்டுகளை இணைக்கவில்லை என்றால் டிசம்பர் 31ஆம் தேதிக்குப் பிறகு பான் கார்டு செயலிழந்து விடும்.

குறிப்பாக, ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளதால், பான் தகவல்கள் கூடுதல் பாதுகாப்புடன் இருக்கும். இதுவரை 11.48 கோடி நிரந்தரக் கணக்கு பான் எண்கள் இன்னும் ஆதார் அட்டையுடன் இணைக்கப்படவில்லை என்று நிதித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே ஆதார் உடன் பான் கார்டு இணைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. தற்போது இந்த விதிமுறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இலவச ஆதார் அப்டேட் :

உங்கள் ஆதார் அட்டையில் உள்ள விவரங்களை இலவசமாக அப்டேட் செய்வதற்கான டிசம்பர் 14ஆம் தேதியே கடையாகும். அதன் பிறகு அப்டேட் செய்தால், அதற்கு கட்டணம் வசூலிக்கப்படும். குறிப்பாக, 10 ஆண்டுகளுக்கு மேல் அப்டேட் செய்யப்படாமல் இருக்கும் ஆதார் விவரங்களை தற்போது அப்டேட் செய்து வைக்குமாறு UIDAI அறிவுறுத்தியுள்ளது.

எனவே, டிசம்பர் 14ஆம் தேதிக்குள் பெயர், முகவரி மற்றும் பிற தகவல்களைச் செலவின்றி அப்டேட் செய்ய விரும்பினால் myaadhaar.uidai.gov.in என்ற UIDAI இணையதளத்திற்கு செல்லுங்கள். இந்த இணையதளத்தில் தேவையான விவரங்கள் மற்றும் ஆவணங்களைக் கொடுத்து இலவசமாக ஆதார் அப்டேட் செய்ய முடியும்.

Read More : மீண்டும் சம்பவம் இருக்கு..!! தமிழ்நாட்டில் மிக கனமழைக்கான எச்சரிக்கை..!! மக்களே பாதுகாப்பா இருங்க..!!

Tags :
Advertisement