முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

'டிடிஎஃப் வாசனுக்கு எதிராக பிரதமர் அலுவலகத்திற்கு வந்த புகார்..' நோட்டீஸ் அனுப்பிய காவல்துறை!

02:03 PM May 22, 2024 IST | Mari Thangam
Advertisement

பிரதமர் அலுவலகத்தில் வந்த புகாரின் அடிப்படையில் பிரபல யூடியூபர் டிடி எஃப் வாசன் இருச்சக்கர உதிரிப்பாகங்கள் கடைக்கு அம்பத்தூர் போக்குவரத்து காவல் துறையினர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

Advertisement

பிரபல யூடியூப்பராக இருப்பவர் டிடிஎஃப் வாசன். தமிழ்நாட்டில் உள்ள இளைஞர்கள் மத்தியில் தனது சாகச பைக் பயணத்தால் பிரபலமானார். பலரை மிரட்டும் விதமாகவும், ஆபத்தை விளைவுக்கும் விதமாக பைக்குகளை ஓட்டியும், ஸ்டண்ட் செய்தும் வீடியாேவாக பகிர்ந்து வந்தார்.

இந்நிலையில் கடந்த ஆண்டு காஞ்சிபுரம் அருகே ஆபத்தான முறையில் வீலிங் செய்தபோது விபத்தில் சிக்கனார்.  இதனைத் தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் மூலம் மீட்கப்பட்ட டிடிஎஃப் வாசன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின், அவர் மீது காஞ்சிபுரம் பாலுசெட்டி சத்திரம் காவல்நிலையத்தினர் பாதசாரிகளின் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவித்தல், அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டுதல் பிரிவுகள் உட்பட 5 பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்தது.

இதனைத் தொடர்ந்து இவ்வழக்கில் இருந்து வெளியில் வர ஜாமீன் விண்ணப்பித்த அவருக்கு பலமுறை ஜாமீன் நிராகரிக்கப்பட்டது. அப்போது நீதிபதி, டிடிஎஃப் வாசனின் பைக்கை எரிக்கும்படியும், அவரது யூட்யூப் சேனலை மூடவேண்டும் எனவும் கடுமையாகப் பேசி, ஜாமீனை நிராகரித்தார். பின் 10 ஆண்டுகளுக்கு அவரது ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்து உத்தரவிட்டது காஞ்சிபுரம் ஆர்டிஓ அலுவலகம். இந்நிலையில் பல்வேறு மேல்முறையீடுகளுக்குப்பிறகு டிடிஎஃப் வாசனுக்கு ஜாமீன் அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில் அவரது கடையில் அதிக சத்தம் எழுப்பக்கூடிய சைலென்ஸர்கள் விற்பனை செய்யப்படுவதாகவும்,  இதனால் சாலைகளில் வாகன நெரிசல் ஏற்பட்டு போக்குவரத்து இடையூறு ஏற்படுவதாகவும் பிரதமர் அலுவலகத்தில் புகார் சென்றிருந்தது. அதன் அடிப்படையில் ஆவடி காவல் ஆணையரக உத்தரவின் பேரில் அம்பத்தூர் போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் ஜி பரந்தாமன் தலைமையில் அம்பத்தூரை அடுத்த அயப்பாக்கத்தில் உள்ள டிடி எஃப் வாசன் கடைக்கு சென்று ஆய்வு செய்தனர்.

அங்கு விலை உயர்ந்த சைலென்ஸர் விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது.  உடனடியாக போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை அப்புறப்படுத்தியதுடன் அதிக சத்தம் எழுப்பக்கூடிய சைலென்ஸர்களை விற்பனை தடை விதித்து போக்குவரத்து காவல் துறையினர், யூடியூபர் டிடி எஃப் வாசனுக்கு நோட்டீஸ் அளித்துள்ளனர்.

Crime | காங்கிரஸ் நடிகை வித்யா கொடூரக் கொலை..!! கணவர் வெறிச்செயல்..!! நடந்தது என்ன..?

Tags :
noice pollutionTDF VasanYoutuber
Advertisement
Next Article