For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ஓர் ஆண்டில் வருமானம் மட்டும் ரூ.680 தான்...! மத்திய அமைச்சருக்கு எதிராக வழக்கு...!

06:25 AM Apr 07, 2024 IST | Vignesh
ஓர் ஆண்டில் வருமானம் மட்டும் ரூ 680 தான்     மத்திய அமைச்சருக்கு எதிராக வழக்கு
Advertisement

மத்திய அமைச்சரின் ஓர் ஆண்டு வருமானம் ரூ.680 என தெரிவித்துள்ளார்.

Advertisement

மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் 2021-22-ம் நிதியாண்டில் தனது வருமானம் ரூ.680 என வேட்புமனுவில் தெரிவித்துள்ளது குறித்து தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் புகார் அளித்துள்ளது. கேரளாவைச் சேர்ந்த ராஜீவ் சந்திரசேகர் திருவனந்தபுரம் தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சசி தரூரை எதிர்த்து போட்டியிடுகிறார்.

மேலும் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தனது தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் தனது சொத்துக்களை மறைத்ததாகக் குற்றம்சாட்டி உச்ச நீதிமன்ற வழக்கறிஞரும் பெங்களூரைச் சேர்ந்த ஒருவரும் தனித்தனியாக புகார் அளித்துள்ளனர். அவரது வேட்புமனுவை உடனடியாக நிராகரிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். பிரமாண பத்திரத்தில் சொகுசு வாகனங்கள் மற்றும் சொத்துக்கள் குறிப்பிடப்படாததால், பங்குகளை மிகக் குறைவாக மதிப்பிட்டுள்ளதால் முரண்பாடுகள் இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளனர்.

2018 ராஜ்யசபா தேர்தலில் கர்நாடகாவில் போட்டியிட்ட சந்திரசேகர் தனது சொத்து ரூ.65 கோடி என அறிவித்தார், அதுவும் சர்ச்சையானது. அதே போல 2006 மற்றும் 2012 இல் ராஜ்யசபா தேர்தலில் முறையே ரூ.25 கோடி மற்றும் ரூ.37 கோடி மதிப்பிலான சொத்துக்களை அறிவித்தார். 3 முறை காங்கிரஸ் எம்பியாக இருந்த சசி தரூரை எதிர்த்து போட்டியிடும் சந்திரசேகர் வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார்.

Advertisement