For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

இரட்டை இலையை எதிர்த்து போட்டியா..? கேள்வியை சற்றும் எதிர்பாராத ஓபிஎஸ்..!! சட்டென வந்த வைத்திலிங்கம்..!! பரபர பேட்டி..!!

07:12 AM Mar 22, 2024 IST | 1newsnationuser6
இரட்டை இலையை எதிர்த்து போட்டியா    கேள்வியை சற்றும் எதிர்பாராத ஓபிஎஸ்     சட்டென வந்த வைத்திலிங்கம்     பரபர பேட்டி
Advertisement

இரட்டை இலை எங்களுக்குச் சொந்தம் என்று சொல்லும் ஓபிஎஸ், அதே இரட்டை இலை சின்னத்திற்கு எதிராக போட்டியிடலாமா? என்ற கேள்விக்கு ஓபிஎஸ் தரப்பு அளித்த பதில் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

Advertisement

தமிழ்நாட்டில் இந்த முறை லோக்சபா தேர்தலில் பல முனை போட்டி நிலவுகிறது. திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி, நாம் தமிழர் கட்சி என பல முறை போட்டி நடக்கிறது. பாஜக கூட்டணியைப் பொறுத்தவரை பாஜக 19 தொகுதிகளில் போட்டியிடுகிறது. பாஜக கூட்டணியில் உள்ள 4 கட்சிகள் தாமரை சின்னத்தில் போட்டியிடுகின்றன. மேலும், பாமக 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 3 தொகுதிகளும், அமமுக 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், பாஜக கூட்டணியில் ஒரு தொகுதியில் மட்டும் போட்டியிட உள்ளதாக அறிவித்தார்.

லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாகச் சொன்ன அவர், இரட்டை இலை சின்னத்தைப் பெறச் சட்டப் போராட்டம் நடத்தி வருகிறோம் என்றும், இந்த முறை லோக்சபா தேர்தலில் ஒரே ஒரு தொகுதியில் மட்டும் சுயேச்சை சின்னத்தில் நின்று பலத்தைக் காட்ட உள்ளோம் என்றும் அறிவித்தார். அதன்படி, ராமநாதபுரம் ஒரு தொகுதியில் மட்டும் போட்டியிடுவதாகவும் அங்கே தானே களமிறங்க உள்ளதாகவும் அறிவித்தார்.

பின்னர், செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளைக் கேட்ட நிலையில், அதற்கு ஓபிஎஸ் பொறுமையாகப் பதிலளித்தார். அப்போது செய்தியாளர் ஒருவர் இரட்டை இலையை எதிர்த்து ராமநாதபுரம் தொகுதியில் நிற்கப் போகிறீர்களா எனக் கேட்டார். இந்த கேள்வியைச் சற்றும் எதிர்பார்க்காத ஓபிஎஸ், என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் ஸ்டன் ஆனார். அப்போது அருகே இருந்த வைத்தியலிங்கம் ஓபிஎஸை ஓவர்டேக் செய்து அந்த கேள்விக்குப் பதிலளித்தார்.

இரட்டை இலையை எதிர்த்து இல்லை.. இரட்டை இலையைப் பெறுவதற்கே நாங்கள் போட்டியிடுகிறோம் என்று கூறினார். அவர் சட்டென இந்த பதிலைச் சொல்வதைக் கேட்டு அங்கே இருந்தவர்கள் கைதட்டினர். அதன் பின்னரே ஓபிஎஸ் சற்று நிம்மதியடைந்தார். நீங்கள் உங்களுக்கு வாக்கு கேட்கிறீர்கள். ஆனால், மக்கள் உங்களுக்கு வாக்களிப்பதாக நினைத்து இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்தால் என்ன செய்வது என செய்தியாளர் ஒருவர் கேட்டார். அதற்கும் வைத்தியலிங்கம் ரெடியாக பதிலை வைத்திருந்தார். இந்த காலம் வேறு.. இப்போது மக்கள் அப்படியெல்லாம் வாக்களிக்க மாட்டார்கள்.

எந்த சின்னத்தில் போட்டியிட போகிறீர்கள் என்ற கேள்வி வந்த போது அதற்கு ஓபிஎஸ் பதில் சொல்வார் என அமைதியாகிவிட்டார் வைத்தியலிங்கம். இந்த கேள்விக்கு பதிலளித்த ஓபிஎஸ், "நாங்கள் ஒரு சின்னத்தை தேர்வு செய்து வைத்துள்ளோம். அது குறித்து தேர்தல் ஆணையத்தில் கேட்போம். உரிய நேரத்தில் நிச்சயம் அறிவிப்போம்" என்றார்.

Read More : ஏப்.19ஆம் தேதி ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை..!! இந்திய தேர்தல் ஆணையம் அதிரடி..!!

Advertisement