முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

மழையால் 33 சதவீதம் அளவுக்கு மேல் பயிர்கள் பாதிப்பு இருந்தால், மட்டுமே இழப்பீடு...! அமைச்சர் அறிவிப்பு

Compensation will be given only if crops are damaged by rain by more than 33 percent.
05:55 AM Nov 29, 2024 IST | Vignesh
Advertisement

கனமழையால் பயிர்களில் 33 சதவீதம் அளவுக்கு மேல் பாதிப்பு இருந்தால், உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

Advertisement

தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து மழை பெய்தது. இதனால், இளம்சம்பா, தாளடி நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் உக்கடை பகுதியில் மழையால் மூழ்கி உள்ள நெற்பயிர்களை அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கோவி.செழியன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

ஆய்வுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்; தொடர் மழையால் தஞ்சை மாவட்டத்தில் 2,367 ஏக்கர், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் 8,250 ஏக்கர், நாகை மாவட்டத்தில் 19,202 ஏக்கர், திருவாரூர் மாவட்டத்தில் 2,395 ஏக்கர், ராமநாதபுரம் மாவட்டத்தில் 2,055 ஏக்கர், திருவண்ணாமலை மாவட்டத்தில் 87 ஏக்கர் என தமிழகம் முழுவதும் 34,356 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியது முதல்கட்ட கணக்கீட்டில் தெரியவந்துள்ளது.

வேளாண் துறை மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள், மழைநீரில் மூழ்கி சேதமடைந்துள்ள பயிர்களின் விவரங்களை கணக்கீடு செய்யும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். பயிர்களில் 33 சதவீதம் அளவுக்கு மேல் பாதிப்பு இருந்தால், உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மழைநீர் சூழ்ந்த குடியிருப்புகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அந்தந்த மாவட்ட பொறுப்பு அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட கண்காணிப்பு அலுவலர்கள் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஏற்கெனவே முதல்வர் உத்தரவிட்டிருந்தார். மழைக்காலம் தொடங்கும் முன்பே ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு வாய்க்கால்கள் தூர் வாரப்பட்டுள்ளன. இப்பணிக்கு தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும் ரூ.75 கோடி நிதி ஒதுக்கப்பட்டிருந்தது என்றார்.

Tags :
farmersmk stalinMrk paneerselvamtn governmentதமிழ்நாடு
Advertisement
Next Article