முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

பரந்தூர் விமான நிலையம் அமைக்க நிலம் வழங்கியவர்களுக்கு ரூ.35 லட்சம் வரை இழப்பீடு..!! 2 மாதங்களுக்குள் செட்டில்மென்ட்..!!

The Tamil Nadu government has announced that compensation will be provided to those who were given land in Paranthur.
07:58 AM Jan 22, 2025 IST | Chella
Advertisement

பரந்தூரில் நிலம் வழங்கியவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

Advertisement

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 13 கிராமங்களில் இருந்து 5,183 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், அரசு கையகப்படுத்தப்பட உள்ள நிலங்கள் விளை நிலங்களாகவும், ஏரி, குளங்களாகவும் இருக்கிறது. இதனால், விமான நிலைய திட்டத்திற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மத்திய - மாநில அரசுகளை கண்டித்து 910 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்தநிலையில், பரந்தூர் மக்களை பாதிக்காமல் புதிய விமான நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு கூறியுள்ளது.

தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கடந்த 10 ஆண்டுகளாக ஆய்வு செய்யப்பட்ட பிறகே பரந்தூர் விமான நிலையம் அமைக்கும் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. மக்கள் பாதிக்கப்படாமல் பரந்தூர் விமான நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதனால், மக்களின் வாழ்வாதாரம், பாதிக்கப்படக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறோம்” என்று விளக்கம் கொடுத்துள்ளது.

இந்நிலையில், பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு நிலம் வழங்கியவர்களுக்கு மார்ச் மாதம் முதல் இழப்பீடு தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இரண்டு மாதங்களில் இழப்பீடு தொகையை வழங்க மாவட்ட நிர்வாகம் மற்றும் தொழில் துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் விமான நிலைய திட்டத்திற்கு நிலம், வீடு, விவசாய நிலங்கள் வழங்கியவர்களுக்கு ரூ.5 லட்சம் முதல் ரூ.35 லட்சம் வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More : ”பரந்தூரில் விமான நிலையம் அமைப்பது உறுதி”..!! விஜய் நேரில் சென்றுவந்த நிலையில் தமிழ்நாடு அரசு பரபரப்பு அறிக்கை..!!

Tags :
இழப்பீடு தொகைதமிழ்நாடு அரசுபரந்தூர் விமான நிலையம்
Advertisement
Next Article