For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ரூ.11 கோடி செலுத்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் நோட்டீஸ்... காங்கிரசை தொடர்ந்து I.T. அதிரடி!

05:38 PM Mar 29, 2024 IST | Baskar
ரூ 11 கோடி செலுத்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் நோட்டீஸ்    காங்கிரசை தொடர்ந்து i t  அதிரடி
Advertisement

காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1,700 கோடி வரி நிலுவை உள்ளதாக நோட்டீஸ் அனுப்பிய நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Advertisement

காங்கிரஸ் கட்சி கடந்த 2017-18 நிதியாண்டு முதல் 2020-21 நிதியாண்டு வரை 4 ஆண்டுகளுக்கு வருமான வரிக் கணக்கை முறையாக தாக்கல் செய்யவில்லை என்றும், இதற்கு வட்டியுடன் கூடிய அபராதமாக ரூ.1,800 கோடி செலுத்த வேண்டும் என்றும் அக்கட்சிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தேர்தல் நெருங்கும் நிலையில் தங்களின் நிதியை அரசு முடக்க பார்ப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியிருந்த நிலையில், தற்போது ரூ.1,800 கோடி அபராதம் கேட்டு காங்கிரஸ் கட்சிக்கு வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பிய சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் வருமான வரித்துறை நோட்டீஸ் விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பழைய பான் கார்டு எண்ணை வைத்து வருமான வரி கணக்கு தாக்கல் செய்யப்பட்டதாகவும் இதற்காக ரூ.11 கோடி செலுத்த வேண்டும் என்றும் நோட்டீஸ் விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து, வருமான வரித்துறையின் நோட்டீஸ்க்கு பதிலளிப்பது தொடர்பாக சட்ட நிபுணர்களிடம் இடதுசாரி கட்சி ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisement