For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

பெரும்பாலான மக்கள் கவனிக்க தவறும் புற்றுநோயின் அறிகுறிகள்.! மருத்துவர்கள் தரும் எச்சரிக்கை.!

05:27 AM Dec 27, 2023 IST | 1newsnationuser4
பெரும்பாலான மக்கள் கவனிக்க தவறும் புற்றுநோயின் அறிகுறிகள்   மருத்துவர்கள் தரும் எச்சரிக்கை
Advertisement

இதய நோய்க்கு அடுத்தபடியாக உலகில் அதிகமானவர்களின் இறப்பிற்கு காரணமான நோயாக புற்று நோய் இருக்கிறது. 2020 ஆம் ஆண்டில் மட்டும் புற்று நோய்க்கு பலியானவர்களின் எண்ணிக்கை 10 மில்லியன் ஆகும். இத்தகைய உயிர் கொல்லி நோயான புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் எளிதாக குணப்படுத்தி விடலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். எனினும் புற்றுநோயின் சில அறிகுறிகளை மக்கள் கவனிக்காமல் விடுவதால் தான் நோய் தொற்றுக்கு ஆளாகி உயிரிழக்கவும் நேரிடுகிறது. புற்றுநோயின் அறிகுறிகளும் சில சாதாரண நோய்களின் அறிகுறிகளை போலத்தான் இருக்கும் எனவே அவற்றை கவனமுடன் கண்காணித்து மருத்துவர்கள் அணுகி சிகிச்சை பெற வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

Advertisement

பெரும்பாலான புற்று நோய்களின் அறிகுறிகளை 90 சதவீத மக்கள் சட்டை செய்யாமல் இருப்பதே நோய் தீவிரமடைந்து உயிரிழப்பிற்கு காரணமாகிறது எனவும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். சில புற்று நோயின் அறிகுறிகளை இந்த பதிவில் காணலாம். எலும்பு வலி புற்றுநோயின் அறிகுறிகளில் முக்கியமானதாக கருதப்படுகிறது. ஒருவருக்கு கடுமையானது முதல் மிதமானவரை எலும்பு வலி இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுமாறு வல்லுனர்கள் அறிவுறுத்துகின்றனர். காரணம் இல்லாமல் மூட்டுகளில் ஏற்படும் எலும்பு வலி எலும்பு புற்றுநோய்க்கான அறிகுறியாக இருக்கலாம் எனவும் எச்சரிக்கின்றனர். தண்ணீரை குடிப்பதிலும் உணவை விழுங்குவதிலும் சிரமம் இருந்தால் தாமதிக்காமல் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுமாறு நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். ஏனெனில் தண்ணீர் குடிப்பதில் சிரமம் இருப்பதும் உணவை விழுங்குவதில் சிரமம் ஏற்படுவதும் புற்றுநோயின் அறிகுறிகளில் ஒன்றாக இருக்கலாம் எனவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஒருவருக்கு சரும அரிப்பானது பல்வேறு காரணங்களால் ஏற்படலாம். உதாரணமாக அலர்ஜி மற்றும் தோல் நோய்களாலும் சரி ஏற்படலாம். எனினும் ரத்த புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதிக்கப்பட்ட ரத்த செல்கள் பேலெட்டுகளில் இடையூறை ஏற்படுத்துவதாலும் உடலில் அரிப்பு ஏற்படலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். எனவே அலர்ஜி இல்லாமல் தோல் அரிப்பு இருந்தால் மருத்துவரிடம் சென்று சிகிச்சை எடுத்துக் கொள்வது நல்லது. நெஞ்சு எரிச்சல் மற்றும் நிலையான நெஞ்சுவலி புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இவை வயிற்றுப் புற்றுநோய் அல்லது உணவு குழாய் புற்றுநோயின் அறிகுறிகளில் ஒன்றாக இருக்க வாய்ப்பிருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மூச்சுத் திணறல் நுரையீரல் புற்று நோயின் அறிகுறியாக இருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். எனவே ஒருவருக்கு அடிக்கடி மூச்சுத் திணறல் ஏற்படும்போது அதற்குரிய மருத்துவரை ஆரம்பத்தில் சந்தித்து சிகிச்சை பெற்றுக் கொள்வது நல்லதாகும்.

Tags :
Advertisement