1,60,000 ஆண்டுகளுக்கு பிறகு இன்றிரவு வானில் நடக்கும் அரிய நிகழ்வு.. மிஸ் பண்ணா இனி பார்க்கவே முடியாது..
உலகம் முழுவதும் உள்ள விண்வெளி ஆர்வலர்கள் இன்றிரவு நடக்க உள்ள ஒரு அற்புதமான நிகழ்வுக்காக காத்திருக்கிறார்கள். ஆம்.. G3 ATLAS என்ற வால் நட்சத்திரம் இன்றிரவு அதன் உச்ச பிரகாசத்தை அடைகிறது. 160,000 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே நிகழும் இந்த அரிய வான நிகழ்வை காண வானியல் ஆய்வாளர் மற்றும் ஆர்வலர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.
இந்த வால் நட்சத்திரம் சூரியனின் புறவயத்தில் 8.7 மில்லியன் மைல்களுக்குள் வருவதால், அதன் பிரகாசத்தைக் காண ஒரு அரிய வாய்ப்பை வழங்குகிறது.
கடந்த ஆண்டு ஏப்ரல் 5 அன்று சிலியில் உள்ள சிறுகோள் நிலப்பரப்பு-தாக்க கடைசி எச்சரிக்கை அமைப்பு (ATLAS) மூலம் கண்டுபிடிக்கப்பட்ட G3 ATLAS வால் நட்சத்திரம் ஆரம்பத்தில் மங்கலாக இருந்தது. பின்னர் +19 அளவில் பிரகாசித்தது.
இருப்பினும், கடந்த 2-ம் தேதி ஏற்பட்ட ஒரு மிகப்பெரிய வெடிப்பைத் தொடர்ந்து, இந்த வால் நட்சத்திரத்தின் பிரகாசம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த அதிகரிப்பு காரணமாக வெள்ளி மற்றும் வியாழன் போன்ற முக்கிய கிரகங்களை விட இந்த வால் நட்சத்திரம் அதிகமாக பிரகாசிக்கக்கூடும் என ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். கடந்த 20 ஆண்டுகளில் காணப்பட்ட பிரகாசமான வால் நட்சத்திரமாக மாறக்கூடும்.
விண்வெளி வீரர் டான் பெட்டிட், வாழ்நாளில் ஒரு முறை மட்டுமே பார்க்கக்கூடிய இந்த வால் நட்சத்திரத்தை, சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து, அதன் அண்டப் பயணத்தில், கிரகத்தின் மேலே பறக்கும் போது படம் பிடித்தார்.
இன்றிரவு, ஜனவரி 13, 2025, G3 ATLAS வால் நட்சத்திரம் சூரியனுக்கு மிக அருகில் வரும் போது அந்த வரலாற்றின் அரிய தருணமாக மாறும். வால் நட்சத்திரம் -3.2 அளவில் பிரகாசமாக பிரகாசிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதை வெறும் கண்களால் பார்க்க முடியும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக தெற்கு அரைக்கோளத்தில் இருக்கும் பகுதிகளில் இதை தெளிவாக பார்க்க முடியும். சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு சிறிது நேரத்திலேயே அதைத் வானில் பார்க்கலாம். ஆனால் இதற்கு நேர்மாறாக, வடக்கு அரைக்கோளத்தில் உள்ளவர்கள், இதை பார்க்க முடியாது.
G3 ATLAS வால் நட்சத்திரத்தை வானியலாளர்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர். மேலும் சூரியனுக்கு மிக அருகில் இருப்பது வால் நட்சத்திரத்தின் நிலைத்தன்மை குறித்து கேள்விகளை எழுப்புகிறது. ஏனெனில் பெரிய வால் நட்சத்திரங்கள் பெரும்பாலும் சூரியனை நெருங்கும் போது துண்டு துண்டாக உடைந்துவிடும்.
இந்த நிச்சயமற்ற தன்மைகள் இருந்தபோதிலும், வாழ்நாளில் ஒரு முறை மட்டுமே பார்க்கக்கூடிய ஒரு காட்சியாக அரிதான காட்சியாக இருப்பதால், அதனை வானில் பார்க்க நட்சத்திரப் பார்வையாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் உற்சாகமாக காத்திருக்கின்றனர்.
மேலும் இந்த வால் நட்சத்திரத்தை தெளிவாக பார்க்க விரும்புவோர் தொலைநோக்கிகளை பயன்படுத்த பரிந்துரிக்கப்படுகிறது. G3 ATLAS நமது வானத்தின் வழியாக அதன் வரலாற்றுச் சிறப்புமிக்க பயணத்தை மேற்கொள்வதால், அது வானியல் நாட்காட்டியில் ஒரு அழியாத முத்திரையை விட்டுச் செல்லும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்..
Read More : கட்டுக்கடங்காத தீ.. பலி எண்ணிக்கை 24 ஆக உயர்வு.. 1.5 லட்சம் பேர் வீட்டை விட்டு வெளியேற உத்தரவு..!!