இரவு சரியாக 11.30 மணி... நகைச்சுவை நடிகர் போண்டா மணி குடும்பம் சோகம்...! அதிர்ச்சியில் திரையுலகம்...
நகைச்சுவை நடிகர் போண்டா மணி காலமானார்.
நகைச்சுவை நடிகர் போண்டா மணி சுமார் 275 படங்களில் நடித்துள்ளது உலகம் முழுவதும் உள்ள தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பரிச்சயமானவர். அவர் தனது பெரும்பாலான படங்களில் வடிவேலுவுடன் நகைச்சுவைக் காட்சிகளில் தோன்றினார் மற்றும் 90கள் மற்றும் 2000களில் பிரபல நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக இருந்தார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு போண்டா மணி இதயக் கோளாறால் பாதிக்கப்பட்டு சென்னை ஓமந்தூரார் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் குணமடைந்து வீடு திரும்பினார். இந்த நிலையில், நேற்று இரவு 11.30 மணியளவில் பல்லாவரம் அருகே உள்ள பொழிச்சலூரில் உள்ள தனது வீட்டில் நடிகர் போண்டா மணி திடீரென மயங்கி விழுந்துள்ளார்.
அவரை அவரது உறவனினர்கள் அருகே உள்ள அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் சென்றுள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இவரது முறை துறையினர் மத்தியிலும் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிங்கப்பூரில் வசித்து வந்த இலங்கைத் தமிழரான மணி, பாக்யராஜுடன் பழகி, 1991ஆம் ஆண்டு வெளியான அவரது 'பௌனு பவுனுதான்' திரைப்படத்தில் அறிமுகமானார். "சாய் கலை கூடம்" என்ற மேடை நாடகக் குழுவை நடத்தி, தீவிர உறுப்பினராகவும் உள்ளார்.