முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

பிக்பாஸ் 8இல் நகைச்சுவை ஜாம்பவான்..!! அடடே இந்த நடிகையுமா..? ஆரம்பத்துலயே பஞ்சாயத்து வெடிக்கப் போகுது..!!

The proposed list of 15 Bigg Boss contestants has been leaked. A total of 9 male contestants and 6 female contestants are said to be participating in Bigg Boss season 8.
03:04 PM Sep 20, 2024 IST | Chella
Advertisement

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8-வது சீசன் அடுத்த மாதம் தொடங்கவுள்ளது. இதுவரை நடந்து முடிந்த 7 சீசன்களை தொகுத்து வழங்கிய கமல்ஹாசன், இந்த முறை சினிமா பணிகள் காரணமாக விலகியதால், அவருக்கு பதிலாக விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார். அவர் அந்நிகழ்ச்சியை எப்படி தொகுத்து வழங்குவார் என்பதை காண ஒருபுறம் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

Advertisement

மறுபுறம் இம்முறை போட்டியாளராக கலந்துகொள்ளப்போவது யார் என்கிற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அதன்படி, அந்நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ள 15 போட்டியாளர்களின் உத்தேசப் பட்டியல் கசிந்துள்ளது. மொத்தம் 9 ஆண் போட்டியாளர்களும், 6 பெண் போட்டியாளர்களும் பிக்பாஸ் சீசன் 8இல் கலந்துகொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

ஆண் போட்டியாளர்களை பொறுத்தவரை பிரபல தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர், தொகுப்பாளர் தீபக், சீரியல் நடிகர் வினோத், பாரதி கண்ணம்மா சீரியலில் நாயகனாக நடித்த அருண், சீரியல் நடிகர் அர்னவ், நகைச்சுவை நடிகர் செந்திலின் பெயரும் அடிபடுகிறது. இறுதியாக பிரபல வில்லன் நடிகர் ரியாஸ் கான், நடிகரும் இயக்குனருமான ரஞ்சித், தொகுப்பாளரும் நடிகருமான ஜெகன் ஆகியோரது பெயர்கள் இந்த லிஸ்டில் இடம்பெற்றுள்ளது.

பெண் போட்டியாளர்களை பொறுத்தவரை செல்லம்மா சீரியலில் நாயகியாக நடித்த அன்ஷிதா, ஈரமான ரோஜாவே சீரியல் நாயகி பவித்ரா ஜனனி, பாரதி கண்ணம்மா சீரியல் வில்லி ஃபரீனா, நடிகை தர்ஷா குப்தா, மகாராஜா படத்தில் விஜய் சேதுபதி மகளாக நடித்த சஞ்சிதாவும் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்லவுள்ளதாக கூறப்படுகிறது. இவர்களுடன் முந்தைய பிக்பாஸ் சீசன்களை சேர்ந்த போட்டியாளர்கள் சிலரும் இம்முறை கலந்துகொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

Read More : உடம்பில் உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு..!! கப்பிங் தெரபி பற்றி தெரியுமா..?

Tags :
பிக்பாஸ்பிக்பாஸ் நிகழ்ச்சிவிஜய் சேதுபதி
Advertisement
Next Article