For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

முக்கிய அறிவிப்பு...! கோடை விடுமுறைக்கு பின் ஜூன் 19-ம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும்...!

06:10 AM Apr 07, 2024 IST | Vignesh
முக்கிய அறிவிப்பு     கோடை விடுமுறைக்கு பின் ஜூன் 19 ம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும்
Advertisement

கோடை விடுமுறைக்கு பின் கல்லூரிகள் ஜூன் 19 ஆம் தேதி திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இதுகுறித்து கல்லூரி கல்வி இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; 2023 - 24 ஆம் கல்வியாண்டில் பல்கலைக்கழகம் நிர்ணயம் செய்த மொத்த வேலை நாட்களுக்கு குறையாமல் உள்ளது என்பதை கல்லூரி முதல்வர்களே உறுதி செய்து கொண்டு கல்லூரி இறுதி பணி நாளை நிர்ணயித்து கொள்ளலாம். அந்தவகையில், கோடை விடுமுறைக்கு பின் கல்லூரிகள் ஜூன் 19 ஆம் தேதி திறக்கப்படும் என கல்லூரி கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார்.

பள்ளி திறப்பு

11, 12 ஆகிய வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு முடிவடைந்து விட்டது. 10ஆம் வகுப்பிற்கு வரும் 8-ம் தேதி பொதுத்தேர்வு நிறைவு பெறுகிறது. தமிழகத்தில் 1 முதல் 3-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பருவதேர்வு முடிந்துவிட்டது. அவர்களுக்கு இன்று முதல் கோடை விடுமுறை. 4 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் ஏப்ரல் 8, 10, 12-ம் தேதிகளில் பள்ளிக்கு வந்து தேர்வுக்கு தயாராக வேண்டும். இடைப்பட்ட தினங்கள் அரசு மற்றும் வார விடுமுறை நாட்கள் அன்று பள்ளிகளுக்கு விடுமுறை.

தேர்தல் பணிகள் காரணமாக ஏப்ரல் 15 முதல் 21-ம் தேதி வரை மாணவர்கள் பள்ளிக்கு வர தேவையில்லை. இந்த மாணவர்களுக்கு மீண்டும் ஏப்ரல் 22, 23-ம் தேதிகளில் அறிவியல், சமூக அறிவியல் தேர்வுகள் நடைபெறும். ஏப்ரல் 24 முதல் கோடை விடுமுறை விடப்படும். ஆசிரியர்கள் அனைவரும் இறுதி வேலை நாளான ஏப்ரல் 26-ம் தேதி வரை பள்ளிக்கு வருவது அவசியம்.

ஏப்ரல் ஜூன் மாதத்தில் வெயிலின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் பள்ளிகள் திறக்கும் தேதி குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்படவில்லை.

Advertisement