முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

"பரபரப்பு.. இனி விநாயகர் சதுர்த்திக்கு கட்டணம்.." வெளியான அதிரடி உத்தரவு.!

07:47 PM Jan 25, 2024 IST | 1newsnationuser7
Advertisement

விநாயகர் சதுர்த்தி இந்தியா முழுவதும் விமர்சையாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்றாகும். இந்தப் பண்டிகையின் போது விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து வந்து நீர்நிலைகள் மற்றும் கடலில் கரைப்பது வழக்கம். இதுபோன்று கரைப்பதால் சுற்றுச்சூழல் மாசுபாடு ஏற்படுவதாக பலரும் விமர்சனம் செய்திருந்தனர்.

Advertisement

இந்நிலையில் பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் பயன்படுத்தி சிலைகள் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டிய சுற்றுச்சூழல் ஆர்வலரான ஹரிகரன் என்பவர் தென் மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். மேலும் மதுரை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை விளம்பரப்படுத்தவும் விநாயகர் சதுர்த்தி வருவதற்கு முன்பே இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால் தான் சுற்றுச்சூழல் மாசுபாடு கட்டுப்படுத்த முடியும் எனவும் தனது மனுவில் தெரிவித்து இருந்தார்

இதற்கு பதில் அளித்துள்ள தமிழக அரசு தேசிய சுற்றுச்சூழல் தீர்ப்பாயத்தின் வழிமுறைகளை பின்பற்றி
வருவதாகவும் சுற்றுச்சூழல் தொடர்பான நடவடிக்கைகளை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் எடுத்து வருவதாகவும் தெரிவித்திருந்தது. தமிழக அரசு மற்றும் மனுதாரர் ஆகியோரின் வாதங்களைக் கேட்டறிந்த தேசிய தீர்ப்பானையம் விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு கட்டணம் வசூலிக்கும்படி அரசை வலியுறுத்தி இருக்கிறது.

மேலும் இது தொடர்பாக தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள தென் மண்டல தேசிய சுற்றுச்சூழல் தீர்ப்பாயம் விநாயகர் சிலைகள் கரைப்பதற்கு அனுமதி வழக்கும்போது அதற்கான கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என உத்தரவிட்டிருக்கிறது. இந்தக் கட்டணத்தை நீர்நிலைகளின் பராமரிப்பு மற்றும் சுற்றுச்சூழலை மேம்படுத்துவதற்கு பயன்படுத்துமாறும் தெரிவித்துள்ளது. மேலும் அனுமதி வழங்கப்படாத இடத்தில் கரைக்கப்படும் விநாயகர் சிலைகளுக்கு வசூலிக்கப்படும் அபராதத்தை அந்த நீர் நிலைகளை சுத்தப்படுத்துவதற்கு பயன்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

Tags :
IdolVinayagar chaturthiவிநாயகர் சதுர்த்தி
Advertisement
Next Article