சளி, இருமல், அதிக காய்ச்சல்..!! “ஸ்கரப்டைபஸ்” நோயின் முக்கிய அறிகுறிகள்..!! எப்படி பரவுகிறது..? சிகிச்சைகள் என்ன..?
தமிழ்நாட்டில் ”ஸ்க்ரப்டைபஸ்” என்ற புதிய பாக்டீரியா வைரஸ் பரவி வருவதால், பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். உலகம் முழுக்க பல நாடுகளில் அவ்வப்போது இந்த டைபஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ரிக்கட்ஸியா என்ற பாக்டீரியா பாதித்த ஒட்டுண்ணிகள், நம்மை கடித்தால் இந்த வைரஸ் ஏற்படும். சில சமயங்களில் பூச்சிகள் கூட இதனால் பாதிக்கப்பட்டிருக்கும். அப்படி இருக்கும் பட்சத்தில், அந்த பூச்சிகள் நம்மை கடித்தால் கூட “ஸ்கரப்டைபஸ்” ஏற்படும்.
இந்நிலையில், ஸ்க்ரப்டைஃபஸ் தற்போது தமிழ்நாட்டிலும் பரவி வருவதாகவும், இதற்கான அறிகுறிகள் மற்றும் சிகிச்சைகள் குறித்து பொதுசுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில், ”ரிக்கட்ஸியா எனப்படும் பாக்டீரியா பாதித்த ஒட்டுண்ணிகள், பூச்சிகள், உயிரினங்கள் போன்றவை மனிதர்களைக் கடிக்கும்போது இந்த ஸ்க்ரப்டைபஸ் நோய் ஏற்படுகிறது” என்று கூறியுள்ளார்.
ஸ்க்ரப்டைஃபஸ் அறிகுறிகள் :
- * சளி
* இருமல்
* அதிக காய்ச்சல்
* உடல்வலி
* மூக்கு அடைப்பு
* தலைவலி
* தும்மல்
* தொண்டை புண்
* கண்களில் நீர் வடிதல்
* மூக்கில் இருந்து தொண்டைக்குள் சளி செல்லுதல்
* சுவை இழப்பு
* வாசனை இழப்பு
* சிலருக்கு உடலில் தடிப்புகள், வீக்கம்
யாருக்கு பாதிப்பு அதிகம்..?
விவசாயிகள், புதர் மண்டிய மற்றும் வனப்பகுதிகளில் வசிப்பவர்கள், கர்ப்பிணி பெண்கள், மலையேற்றத்தில் ஈடுபடுவோர், பூச்சிக் கடிக்கும் உள்ளாகும் சூழலில் இருப்பவர்களுக்கு ஸ்க்ரப்டைபஸ் நோய் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
தமிழ்நாட்டில் எந்த மாவட்டங்களில் நோய் பரவல் அதிகம்..?
தமிழ்நாட்டை பொறுத்தவரை தற்போது சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலுார், திருப்பத்துார் ஆகிய மாவட்டங்களில் ஸ்க்ரப்டைபஸ் நோய் பாதிப்பு அதிகம் உள்ளது.
நோயை கண்டறிவது மற்றும் சிகிச்சை முறைகள் :
‘எலிசா’ ரத்தப் பரிசோதனை மற்றும் மூலக்கூறு பரிசோதனைகள் மூலம் இந்நோயைக் கண்டறியலாம். ஸ்க்ரப்டைபஸ் வைரஸ் பாதிப்பு உள்ளானவர்களுக்கு அசித்ரோமைசின், டாக்ஸிசைக்ளின் போன்ற ஆண்டிபயாடிக் மருந்துகள் மூலம் சிகிச்சை அளிக்க வேண்டும்.
அப்படியும், உடல்நிலையில் முன்னேற்றம் இல்லாமல் இருந்தால் இதயம், நுரையீரல், சிறுநீரக பாதிப்புகள் ஏற்பட்டால், ரத்த நாளத்தின் வழியே திரவ மருந்துகளை செலுத்தி உயர் சிகிச்சை அளிக்க வேண்டும். தேவைப்படும் பட்சத்தில் உயர் சிகிச்சை மையங்களில் நோயாளிகளை அனுமதித்து சிகிச்சை தர வேண்டும்” என்று அறிவுறுத்தியுள்ளார்.
தமிழ்நாட்டில் ஏற்கனவே தற்போது 5 முதல் 17 வயதுக்கு உட்பட்டோரை ‘வாக்கிங் நிமோனியா’ எனப்படும் நுரையீரல் தொற்று காய்ச்சல் தாக்கி வருவதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ள நிலையில், ஸ்க்ரப்டைபஸ் நோய் பாதிப்பு தீவிரமடைந்துள்ளதால், பொதுமக்கள் கவலையடைந்துள்ளனர்.