காபியில் ப்ளிச்சிங் பவுடர்: கணவனை கொல்ல திட்டம் தீட்டிய மனைவி....
அமெரிக்காவில் காபியில் ப்ளிச்சிங் பவுடர் கலந்து கணவனை கொல்ல திட்டம் போட்ட மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க விமானப்படை உறுப்பினரான ராபி ஜான்சன், மெலடி ஃபெலிகானோ என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். தம்பதிகள் தங்கள் குழந்தையுடன் ஜெர்மனியில் குடியேறி வசித்து வந்தனர். ராபி ஜான்சனுக்கு காபி என்றால் பிரியம். இந்த நிலையில், மனைவி மெலடி ஜான்சனுக்கு காபி மூலம் ப்ளிச்சிங் பவுடரை கலந்து ஸ்லோ பாயிஷனாக கொடுத்து வந்துள்ளார்.
அப்படி ஒரு நாள் தனது மனைவி கொடுத்த காபி வித்தியாசமாக இருப்பதை உணர்ந்தார் ஜான்சன். அதன் காரணத்தை கண்டறியமுன்றார். இதனையடுத்து, வீட்டில் உள்ள தண்ணீரை ஆய்வு செய்து தொடங்கினார். வெவ்வேறு சுவைக்கும் தண்ணீருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அவர் உறுதியாக நம்பிய ஜான்சன், பிறகு கவனத்தை காபியின் பக்கம் திருப்பினார். அதனை தொடர்ந்து, காபியில் "அதிக அளவு குளோரின்" (ப்ளீச்சிங் பவுடர்) இருப்பதை அவர் கண்டறிந்தார்.
இதனையடுத்து, ஜான்சன் அமெரிக்காவிற்கு மீண்டும் குடியேறினார். பின்னர், வீட்டில் கேமராக்களை அமைத்து கண்காணிக்க தொடங்கினார். அப்போது, அவரது மனைவி தனது காபி மேக்கிங் மெஷினில் குளோரின் சேர்ப்பதைக் அவர் கண்டார். இதனையடுத்து, மனைவி ப்ளிச்சிங் பவுடர் கலப்பது தொடர்பான காட்சிகளை காவல்துறையிடம் ஒப்படைத்தார்.
இதனை தொடர்ந்து, போலீசார் நடத்திய விசாரணையில், கணவன் இறந்த பிறகு இன்சூரன்ஸ் பணம் பெறுவதற்காக அவரைக் கொல்ல முயன்றிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மேலும், அந்த பெண்ணுக்கு மூன்று ஆண்டுகள் நன்னடத்தை மற்றும் மனநல சிகிச்சை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.