முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

’கோட்’ திரைப்படம்..!! வாரிசுகளை வம்பிழுத்த ரசிகர்..!! ’உங்க அப்பா பேரு சொல்லுங்க’..!! பதிலடி கொடுத்த வெங்கட் பிரபு..!!

A war of words is going on between Venkat Prabhu and a user on site X.
03:15 PM Aug 30, 2024 IST | Chella
Advertisement

சென்னை 28 படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் வெங்கட் பிரபு. அதனைத் தொடர்ந்து கோவா, சரோஜா உள்ளிட்ட படங்களின் வழியாக தனக்கென ஒரு தனித்துவமான பாணியை உருவாக்கி ரசிகர்களை பெரிதும் கவர்ந்தார். சிறிய பட்ஜெட்டில் சின்ன சின்ன நடிகர்களை வைத்து காமெடி ஜானரில் படங்களை இயக்கி வந்தார்.

Advertisement

இதையடுத்து, தன்னால் பெரிய ஸ்டார்களை வைத்து மாஸான படங்களையும் இயக்க முடியும் என நிரூபித்து காட்டினார் வெங்கட் பிரபு. அந்த வகையில், அஜித்தை வைத்து மங்காத்தா, சூர்யாவை வைத்து மாஸ் என்கிற மாசிலாமணி, தற்போது விஜய்யை வைத்து தி கோட் படத்தை இயக்கியுள்ளார். அடுத்தபடியாக சிவகார்த்திகேயன் படத்தை இயக்கவிருப்பதாகவும் வெங்கட் பிரபு சமீபத்தில் தெரிவித்துள்ளார்.

விஜய் நடித்துள்ள கோட் படத்தை, எ.ஜி.எஸ். என்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தில் பிரசாந்த், பிரபு தேவா, சினேகா, லைலா, மோகன், மீனாக்‌ஷி செளதரி, வைபவ், பிரேம்ஜி உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். வரும் செப்டம்பர் 5ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், எக்ஸ் தளத்தில் வெங்கட் பிரபுவுக்கும், பயனர் ஒருவருக்கு வார்த்தை போர் நடந்து வருகிறது. அந்த ரசிகர் வெளியிட்டுள்ள பதிவில், எஸ்.ஏ.சி. பையன், தியாகராஜன் பையன், சுந்தரம் மாஸ்டர் பையன், மலேசியா வாசூதேவன் பையன், இளையராஜா பையன், கங்கை அமரன் பையன், கல்பாத்தி அகோரம் பொண்ணு இணைந்து மிரட்டும் ’கோட்’ என குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு இயக்குனர் வெங்கட் பிரபு, ”நன்றி பிரதர்..!! உங்க அப்பா பேரு சொல்லுங்க அவருக்கும் நன்றி சொல்றேன்” என தெரிவித்துள்ளார். அதற்கு அந்த பயனர், ‘தேவைப்படாது... நான் ஒன்னும் உறவுமுறை அல்ல’ என தெரிவித்துள்ளார்.

Read More : பெண்களே..!! சுயதொழில் தொடங்க போறீங்களா..? தமிழ்நாடு அரசின் இந்த திட்டத்தை மிஸ் பண்ணிடாதீங்க..!!

Tags :
கோட் திரைப்படம்விஜய்வெங்கட் பிரபு
Advertisement
Next Article