For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

தமிழகமே மகிழ்ச்சி செய்தி...! ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய்..‌.! அமைச்சர் தகவல்

Coconut oil in Tamil Nadu ration shops
06:41 AM Jul 09, 2024 IST | Vignesh
தமிழகமே மகிழ்ச்சி செய்தி     ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய்  ‌   அமைச்சர் தகவல்
Advertisement

தமிழக ரேஷன் கடைகளில் தேங்காய் மற்றும் கடலை எண்ணெய் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தெரிவித்துள்ளார்.

Advertisement

தமிழகத்தில், தற்போது 2.23 கோடி குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இவர்களுக்கு 34,793 ரேஷன் கடைகள் மூலம் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த குடும்ப அட்டைகள் மூலம் 7 கோடியே 51, 954 பயனாளிகள் பயன்பெறுகின்றனர். இவர்கள் அனைவருக்கும் அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது.

அதன்படி சர்க்கரை 1 கிலோ, ரூ. 13.50, கோதுமை ரூ.7.50, மண்ணெண்ணெய் லிட்டருக்கு ரூ. 13.60 – 14.20, துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு கிலோ ரூ. 30.00, பாமாயில் 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல தமிழகத்தில் ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் விற்பனை செய்வதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் தமிழக ரேஷன் கடைகளில் தேங்காய் மற்றும் கடலை எண்ணெய் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தெரிவித்துள்ளார். விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் நெல், கரும்பு, தேங்காயை மதிப்பு கூட்டும் பொருள்களாக மாற்ற வேண்டும் எனக் கூறிய அவர், சிறு, குறு விவசாயிகள் அரசிடம் கடன் பெறாமல் வருமானத்தை சேமிக்கும் வகையில் உற்பத்தியை அதிகரித்து வருவாயை பெருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Tags :
Advertisement