For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

மார்பக புற்றுநோய்க்கு மருந்தாகும் தேங்காய் பால்..!! இப்படி பயன்படுத்தி பாருங்க..!! சூப்பர் ரிசல்ட்..!!

The fatty acids in coconut milk convert the bad cholesterol in our body into good cholesterol.
05:00 AM Jan 21, 2025 IST | Chella
மார்பக புற்றுநோய்க்கு மருந்தாகும் தேங்காய் பால்     இப்படி பயன்படுத்தி பாருங்க     சூப்பர் ரிசல்ட்
Advertisement

தேங்காய் பால் பொதுவாக சமையலில் பயன்படுத்தக் கூடிய ஒரு முக்கியமான பொருளாகும். தென்னிந்திய சமையலில் தேங்காய் பாலுக்கு என்று முக்கியமான ஒரு இடம் உண்டு. எனினும் தேங்காய் பாலில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்து இருக்கிறது என ஆயுர்வேத மருத்துவம் தெரிவிக்கிறது. தேங்காய்ப்பால் அதிக கொழுப்புச்சத்துக்களை கொண்ட ஒரு பொருள் என்றாலும் இதில் பொட்டாசியம், சோடியம், கொழுப்பு அமிலங்கள், கார்போஹைட்ரேட் நிறைந்து இருக்கிறது.

Advertisement

தேங்காய் பாலை குடிப்பதால் நமது உடலுக்கு பல்வேறு விதமான நன்மைகள் கிடைக்கிறது. தேங்காய் பாலில் கொழுப்பு அமிலங்கள் நிறைந்து இருக்கிறது. இவை நம் கல்லீரலில் சேரும் கெட்ட கொழுப்புகளை சக்தியாக மாற்றி உடலுக்கு தருகிறது. இதன் மூலம் உடலின் ஆற்றல் அதிகரிப்பதோடு கெட்ட கொழுப்புகளும் அழிகிறது. தேங்காய் பால் நம் உடலில் ஏற்படும் வைரஸ் பூஞ்சை மற்றும் பாக்டீரியா தொற்றுக்களுக்கு எதிரான பண்புகளை கொண்டிருக்கிறது.

இவற்றில் இருக்கக்கூடிய அமிலங்கள் வைரஸ் மற்றும் பாக்டீரியா போன்றவை நம் உடலில் பல்கி பெருகுவதை தடை செய்கிறது. மார்பகப் புற்றுநோயை எதிர்த்து போராடுவதில் தேங்காய் பாலின் பண்பு முக்கியமானது. தேங்காய் பாலில் இருக்கும் சத்துக்கள் மார்பக புற்றுநோயை ஏற்படுத்தும் கேன்சர் செல்களை அழிப்பதாகவும் மேலும் கேன்சர் செல்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்துவதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டிருக்கிறது.

தேங்காய் பாலில் இருக்கும் கொழுப்பு அமிலங்கள் நமது உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை நல்ல கொலஸ்ட்ராலாக மாற்றுகிறது. இது தொடர்பாக 18 முதல் 57 வயதுக்கு உட்பட்ட நபர்களிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில் தெரிய வந்திருக்கிறது. தேங்காய் பாலில் வைட்டமின் சி, வைட்டமின் ஈ, செலினியம் மற்றும் துத்தநாக சத்துக்கள் நிறைந்திருக்கிறது. இவை மூளையின் ஆரோக்கியத்தை பாதுகாப்பது ஒரு மன அழுத்தம் ஏற்படாமல் தடுக்கிறது. மன அழுத்தம் பிரச்சனை காரணமாக ஏற்படும் அழுத்தத்தில் இருந்து பாதுகாப்பதற்கு தேங்காய் பால் முக்கிய பங்கு வகிக்கிறது.

Read More : ”எல்லை மீறி போய்டீங்க”..!! ”இனி காணும் பொங்கலுக்கு அரசு விடுமுறை கிடையாது”..!! எச்சரிக்கும் பசுமை தீர்ப்பாயம்..!!

Tags :
Advertisement