8.28 மில்லியன் டன் நிலக்கரி கையிருப்பு உள்ளது...!
2024 மே மாதத்தில், இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 83.91 மில்லியன் டன்களை எட்டியது, இது முந்தைய ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும்போது 10.15% வளர்ச்சியைப் பதிவு செய்தது. இது கடந்த மே மாதத்தில் 76.18 மில்லியன் டன்னாக இருந்தது. இந்தக் காலகட்டத்தில், கோல் இந்தியா லிமிடெட் 64.40 மில்லியன் டன் நிலக்கரியை உற்பத்தியை அடைந்தது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 7.46% வளர்ச்சியைக் குறிக்கிறது, கூடுதலாக, மே 2024 இல் கேப்டிவ் மற்றும் பிற நிறுவனங்களின் நிலக்கரி உற்பத்தி 13.78 மில்லியன் டன்னாக இருந்தது. இது முந்தைய ஆண்டை விட 32.76% வளர்ச்சியை பிரதிபலிக்கிறது.
இதேபோல், மே 2024 க்கான இந்தியாவின் ஒட்டுமொத்த நிலக்கரி கையாளுதல் 90.84 மில்லியன் டன்னாக எட்டியது, இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 10.35% அதிகமாகும். கடந்த ஆண்டில் இது 82.32 மில்லியன் டன்னாக பதிவு செய்யப்பட்டது. மே 2024 இல், கோல் இந்தியா நிறுவனம் 69.08 மெட்ரிக் டன் நிலக்கரியை அனுப்பியது, இது முந்தைய ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடும்போது 8.50% வளர்ச்சியாகும், இது முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் 63.67 மில்லியன் டன்னாக இருந்தது.
நிலக்கரி நிறுவனங்களிடம் மொத்த நிலக்கரி கையிருப்பு 96.48 மில்லியன் டன்னாக உள்ளது. கோல் இந்தியா நிறுவனத்திடம் 83.01 மில்லியன் டன் நிலக்கரியும், கேப்டிவ் மற்றும் இதர நிறுவனங்களிடம் 8.28 மில்லியன் டன் நிலக்கரியும் கையிருப்பு உள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.