முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

2024 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் நிலக்கரி இறக்குமதி 8.59% குறைந்தது...!

Coal imports decreased by 8.59% during the period from April to September 2024
08:25 AM Nov 21, 2024 IST | Vignesh
Advertisement

2024 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் முறைப்படுத்தப்படாத துறைகளின் நிலக்கரி இறக்குமதி 63.28 மில்லியன் டன்னாக குறைந்தது. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 70.18 மில்லியன் டன்னாக இருந்தது. அதாவது நிலக்கரி இறக்குமதி 9.83% குறைந்துள்ளது.

Advertisement

இதே போல் நிலக்கரி அடிப்படையிலான உள்நாட்டு அனல் மின் நிலையங்களின் நிலக்கரி இறக்குமதி 8.59% குறைந்தது. அதாவது 10.71 மில்லியன் டன்னிலிருந்து 9.79 மில்லியன் டன்னாக குறைந்தது. இந்தத் துறைகள் உள்நாட்டு நிலக்கரி விநியோகத்தை சார்ந்திருப்பது அதிகமாகி உள்ளதை இது காட்டுகிறது. இருப்பினும், எஃகு தொழிற்சாலைக்குத் தேவையான நிலக்கரி இறக்குமதியும், இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி அடிப்படையில் செயல்படும் அனல் மின் நிலையங்களின் நிலக்கரி இறக்குமதியும் அதிகரித்துள்ளது.

2024 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் ஒட்டுமொத்த நிலக்கரி இறக்குமதியின் அளவு 1.36% அதிகரித்து 129.52 மில்லியன் டன்னாக இருந்தது. இது கடந்த ஆண்டு இதே காலத்தில் 127.78 மில்லியன் டன்னாக இருந்தது. 2024 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் ஒட்டுமொத்த இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி மதிப்பை பொறுத்தவரை ரூ.1,38,763.50 கோடியாக இருந்தது. இது கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.1,52,392.23 கோடியாக இருந்தது. நிலக்கரி கொள்முதலில் மிகவும் சிக்கனத்தை கடைப்பிடித்ததன் விளைவாக ரூ.13,628.73 கோடி சேமிப்பு கிடைத்துள்ளது.

Tags :
central govtcoalCoal exportexportindia
Advertisement
Next Article