டிரக் மீது CNG டேங்கர் மோதி கோர விபத்து!. 40 வாகனங்கள் தீயில் எரிந்து நாசம்!. 5 பேர் பலி!. 40க்கும் மேற்பட்டோர் படுகாயம்!.
Accident: ஜெய்ப்பூர்-அஜ்மீர் நெடுஞ்சாலையில்அருகே டிரக் மீது சிஎன்ஜி டேங்கர் மோதி தீப்பிடித்ததில் அடுத்தடுத்து 40க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீயில் எரிந்து நாசமாகின. மேலும் 5 பேர் பலி, 40க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
ஜெய்ப்பூர்-அஜ்மீர் நெடுஞ்சாலையில் இன்று அதிகாலையில் பெட்ரோல் பம்ப் அருகே டிரக் மீது CNG டேங்கர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் டேங்கர் வெடித்து சிதறியதில் அடுத்தடுத்த 40க்கும் மேற்பட்ட வாகனங்களில் தீ பரவி சேதமடைந்தன. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. ஜெய்ப்பூர்-அஜ்மீர் நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் 5 பேர் பலியாகினர். மேலும் படுகாயமடைந்த 40க்கும் மேற்பட்டோர் எஸ்எம்எஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர், அதைத் தொடர்ந்து ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மா மருத்துவமனைக்கு சென்று காயமடைந்தவர்கள் பார்வையிட்டார்.
Readmore: அதிகரிக்கும் டெங்கு!. டெல்லியில் மேலும் 3 பேர் உயிரிழப்பு!. 6,163 பேர் பாதிப்பு!.