துரை தயாநிதி நலமுடன் உள்ளார்!! வதந்திகளை நம்ப வேண்டாம் - வேலூர் சிஎம்சி மருத்துவமனை விளக்கம்
அழகிரியின் மகன் துரை தயாநிதியின் உடல்நலம் குறித்து வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று அவருக்கு சிகிச்சை அளித்து வரும் CMC மருத்துவமனை அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது.
தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மகன் மு.க.அழகிரி. இவரது மகன் துரை தயாநிதி. சென்னை போயஸ் கார்டனிலுள்ள வீட்டில் வசித்துவந்த தயாநிதிக்கு கடந்த ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி திடீரென மயக்கம் ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து அவரை மீட்டு, அப்போலோ மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு மூளையிலுள்ள ரத்தக்குழாயில் அடைப்பு இருப்பதை உறுதிசெய்ததோடு, உடனடியாக சிகிச்சையைத் தொடங்கியிருக்கின்றனர்.
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் 3 மாத காலமாக சிகிச்சை பெற்று வந்த துரை தயாநிதி, மேல் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் துரை தயாநிதியை நேரில் சென்று இருமுறை முதல்வர் முக ஸ்டாலின் பார்த்து விட்டு நலம் விசாரித்துவிட்டு வந்தார். இதனிடையே துரை தயாநிதி உடல் நலம் குறித்து தவறான தகவல் சமூக வலைத்தளங்களில் பரவியது.
அந்த வந்ததிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நிலையில், துரை தயாநிதிக்கு சிகிச்சை நல்லபடியாக நடந்து வருவதாகவும், அவர் உடல் நல்ல நிலையில் இருப்பதாகவும் வேலூர் சிஎம்சி மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. யாரும் அவருடைய உடல் நலம் குறித்து எந்தவித வதந்திகளையும் பரப்பவேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளது.