முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

CM Stalin | அமைச்சர் பிடிஆரை தொழில்நுட்பத்துறைக்கு மாற்றியது ஏன்..!! முதல்வர் முக.ஸ்டாலின் பரபரப்பு விளக்கம்..!!

11:43 AM Feb 23, 2024 IST | 1newsnationuser6
Advertisement

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில், தகவல் தொழில்நுட்பத்துறை சார்பில் Umagine TN தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து பேசிய அவர், பழனிவேல் தியாகராஜனை ஏன் தகவல் தொழிநுட்ப துறைக்கு மாற்றம் செய்யப்பட்டார் என்பது குறித்து விளக்கம் அளித்தார். அதில், ”தகவல் தொழில்நுட்பத்தை முன்வைத்து நடைபெறும் இந்த மாநாட்டை ஏற்பாடு செய்திருக்கக் கூடிய அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அவர்களுக்கு என் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

Advertisement

நமது ஆட்சியில் முதல் இரண்டு ஆண்டுகளில் நிதி அமைச்சராக மிகச் சிறப்பாக செயல்பட்டு பல மாற்றங்களுக்கு வித்திட்டவர். அதே மாற்றங்களை தகவல் தொழில்நுட்பத்திலும் கொண்டு வர தான் அவர் மாற்றம் செய்யப்பட்டார். நான் கொடுத்த பொறுப்பை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சிறப்பாக செய்திருக்கிறார் என்பதற்கு இந்த மாநாடு சாட்சியாகும். நவீன தமிழ்நாட்டின் சிற்பி கலைஞர்‌ என்று நாங்கள் அவரை அழைப்போம். வளர்ச்சி என்பது வெறும் எண்களில் மாற்றம் அல்ல மக்களின் வாழ்க்கை தரத்தில் காட்டுகிறோம்” என தெரிவித்துள்ளார்.

Read More : DMDK-வை வளைத்து போடும் ADMK..!! எல்லாம் ஓகே தானாம்..!! விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

Advertisement
Next Article