For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

PMO MODI | "காதுல பூ சுத்தாதீங்க மிஸ்டர் மோடி"… முதல்வர் ஸ்டாலின் கண்டன பதிவு.!

06:31 PM Apr 14, 2024 IST | Mohisha
pmo modi    காதுல பூ சுத்தாதீங்க மிஸ்டர் மோடி … முதல்வர் ஸ்டாலின் கண்டன பதிவு
Advertisement

2024 ஆம் வருட பாராளுமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி முதல் தொடங்கி ஜூன் மாதம் ஒன்றாம் தேதி இருக்கிறது. பொதுத் தேர்தல் வாக்குப்பதிவு நெருங்குவதை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிரமான வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. தமிழகத்தில் ஆளும் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி பாஜக கூட்டணி மற்றும் அதிமுக கூட்டணி போட்டியிடுகிறது.

Advertisement

தமிழகத்தில் தேர்தலுக்கு இன்னும் 4 நாட்களே எஞ்சி இருக்கும் நிலையில் அரசியல் கட்சித் தலைவர்கள் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி சென்னை வேலூர் மற்றும் மேட்டுப்பாளையத்தில் உரையாற்றினார். இதனைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக மதுரை வாகன பேரணியில் பங்கேற்று பிரச்சாரம் செய்தார்.

தமிழகத்தில் இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரான ராகுல் காந்தி கோவை மற்றும் திருநெல்வேலி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். நிலையில் தமிழகத்தின் வளர்ச்சிக்காக பல லட்ச கோடிகளை மத்திய அரசு நிதியாக வழங்கியிருப்பதாக பிரதமர் மோடி கூறியிருப்பது பொய் என தனது சமூக வலைதள பக்கத்தில் விமர்சித்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.

இது தொடர்பாக பதிவு செய்திருக்கும் அவர் இவ்வளவு பொய்களை எங்கள் காதுகள் தாங்குமா.?அவை பாவம் இல்லையா.? என பதிவிட்டு இருக்கிறார். கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தின் வளர்ச்சிக்காக ரூ.10.76 லட்சம் கோடி விதி வழங்கியதாக பிரதமர் மோடி குறிப்பிட்டு இருக்கிறார். மேலும் எய்ம்ஸ் மருத்துவமனைக்காக 1960 கோடி ரூபாய் ஒதுக்கி இருப்பதாகவும் மோடி தெரிவித்துள்ளார் . இது போன்ற பொய்களின் மூலம் தொடர்ந்து தமிழக மக்கள் காதுகளில் பூ சுற்றி வருவதாகவும் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

Read More: ADMK | “திமுக ஆட்சி நோ கமெண்ட்ஸ் சிம்ப்ளி வேஸ்ட்”… எடப்பாடி பழனிச்சாமி காட்டமான விமர்சனம்.!

Tags :
Advertisement