For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

"மதச்சார்பு சிறுபான்மையினர் அந்தஸ்து.." "மதம் மாறிய ஆதிதிராவிடர்களுக்கான சலுகைகள்.." ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் பேச்சு.!

04:07 PM Jan 09, 2024 IST | 1newsnationuser7
 மதச்சார்பு சிறுபான்மையினர் அந்தஸ்து     மதம் மாறிய ஆதிதிராவிடர்களுக்கான சலுகைகள்    ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் பேச்சு
Advertisement

தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற சிறுபான்மையினர் நடன் சார்ந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது திராவிட மாடல் அரசு சிறுபான்மை இன மக்களுக்காக செய்திருக்கும் நலத்திட்ட உதவிகளையும் இனி செய்ய இருக்கின்ற நலத்திட்டங்கள் பற்றியும் விளக்கிக் கூறினார். மேலும் மாநில அரசால் கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்படும் மதச்சார்பு சிறுபான்மையினர் சான்றிதழ் இனி நிரந்தரமாக வழங்கப்படுவதற்கான ஏற்பாடுகள் செய்ய இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.

Advertisement

இது தொடர்பாக நடைபெற்ற கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின் " அரசு உதவி பெறும் சிறுபான்மை பள்ளிகளில் தமிழ் வழியில் கல்வி கற்கும் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு மாணவிகளை புதுமைப்பெண் திட்டத்தில் சேர்த்துக் கொள்வதற்கான முடிவு குறித்து அரசு ஆலோசனை செய்து வருவதாகவும் தெரிவித்திருக்கிறார். மேலும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய முதல்வர் சிறுபான்மை மக்களின் உரிமைகளை பாதுகாப்பதிலும் அவர்களது பொருளாதார நிலையை மேம்படுத்துவதிலும் திராவிட மாடல அரசு என்றும் முன்னோடியாக செயல்பட்டு வருகிறது என தெரிவித்தார். சிறுபான்மையினரின் எதிர்காலம் குறித்த தொலைநோக்குப் பார்வையான திட்டங்களுடன் திராவிடம் ஆடல் அரசு செயல்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்தவர்களுக்கு 2021 ஆம் ஆண்டு முதல் பல சிறப்பு திட்டங்களை திராவிட மாடலரசு செயல்படுத்தி வருகிறது என சுட்டிக்காட்டினார். குறிப்பாக தேவாலயங்களில் பணியாற்றும் பணியாளர்களின் நலநிமிர் என மேம்பாட்டு வாரியம் அமைக்கப்பட்டதையும் நினைவு கூர்ந்தார். மேலும் சிறுபான்மையின மாணவ மாணவிகள் தங்கி படிக்கும் விடுதிகளில் பண்டிகை தினங்களின் போது சிறப்பு உணவு வழங்க ஏற்பாடு செய்ததையும் குறிப்பிட்டார். தமிழகத்தின் மூன்று மாவட்டங்களில் கிறிஸ்தவ உதவி சங்கங்கள் அமைப்பதற்கு நிதி ஒதுக்க ஏற்பாடு செய்ததையும் சுட்டிக்காட்டினார். குறிப்பாக மாநில அரசால் சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்படும் மதச்சார்பு சிறுபான்மை சான்றிதழை தற்போது 5 வருடங்களுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும். ஆனால் இந்த சான்றிதழ் காலவரையின்றி நிரந்தரமாக வழங்கப்படுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக தெரிவித்திருக்கிறார். மேலும் இந்த சான்றிதழ் பெற விண்ணப்பிப்பவர்களுக்கு என தனியாக இணையதள பக்கம் உருவாக்கும் பணி நடைபெற்று வருவதாகவும் அந்தப் பணிகள் இந்த மாத இறுதிக்குள் முடிவடையும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் ஆதி திராவிடர்களாக இருந்து கிறிஸ்தவ சமயத்திற்கு மதம் மாறியவர்களுக்கு அனைத்து வகையான சலுகைகளும் கிடைக்க அரசியல் அமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்வது தொடர்பாக கடந்த ஏப்ரல் மாதம் தமிழக சட்டமன்றத்தில் தனி தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பதையும் குறிப்பிட்டு காட்டினார் முதல்வர். மேலும் கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்களுக்கான அடக்கஸ்தலங்கள் இல்லாத மாவட்ட தலைநகரங்களில் அரசு நிலம் கையகப்படுத்தப்பட்டு மாநகராட்சி சார்பில் கல்லறை மற்றும் கபர்ஸ்தான் அமைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் கோவில் தேவாலயங்கள் மசூதிகள் ஆகியவற்றை சுற்றி இருக்கக்கூடிய ஆக்கிரமிப்புகள் தொடர்பாக அரசு சிறப்பு கவனம் கொண்டு செயல்படும் எனவும் தெரிவித்திருக்கிறார். அந்த ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

Tags :
Advertisement