முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

2026இல் CM..!! போட்டியிடும் தொகுதியை உறுதி செய்த விஜய்..? அனல் பறக்கும் அரசியல் களம்..!!

Vijay has confirmed the constituency to contest in the 2026 assembly elections
08:16 AM Nov 15, 2024 IST | Chella
Advertisement

சினிமாவில் வசூல் மன்னனாக ஜொலித்த நடிகர் விஜய் கடந்த பிப்ரவரியில் தவெக கட்சியை அறிவித்து ஒப்புக் கொண்ட படங்களில் மட்டும் நடித்துவிட்டு, முழு அரசியல்வாதியாக ஈடுபடப் போவதாக அறிவித்தார். அதன்படி, அக்கட்சியில் கொடியும், கொடிப்பாடலும் வெளியானது. இதைத்தொடர்ந்து தவெகவின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் நடைபெற்றது.

Advertisement

இந்த மாநாட்டை வெற்றிக் கொள்கைத் திருவிழா என்ற பெயரில் பிரமாண்டமாக நடத்திக் காட்டினார் விஜய். கட்சியைத் தொடங்கி, மாநாட்டில் சிக்சர் அடித்து, அடுத்த தேர்தலுக்குள் தன் கட்சியை மக்களிடம் கொண்டு சேர்க்க விஜய் திட்டமிருக்கும் நிலையில், விரைவில் தமிழ்நாடு முழுவதும் விஜய் நடைப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். எனவே, கட்சியின் தவெகவின் செயல்பாடுகள் அடுத்து என்ன என கணிக்க முடியாதபடி விஜய் பலவற்றை திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.

அதன்படி, திமுக ஊழல் பட்டியலை விஜய் வெளியிடப்போகிறார் என தகவல் வெளியான நிலையில், சென்னையில் மருத்துவர் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து தமிழ்நாட்டில் யாருக்கும் பாதுகாப்பில்லை என அரசை குற்றம்சாட்டினார். ஏற்கனவே, மாநாட்டில் திமுகவை வசைபாடிய விஜய், ஆளுங்கட்சிக்கு எதிராகவும் பாஜகவுக்கு எதிராகவும் களமிறங்கியதாக மற்ற கட்சிகள் கூறி வருகின்றன.

இந்நிலையில், 2026இல் முதல்வராகும் கனவுடன் இருக்கும் விஜய், முழு அரசியல்வாதியாக தன்னை செதுக்கி வருகிறார். ஒவ்வொரு கட்சித் தலைவருக்கும் ஏற்ற தொகுதி என பார்த்து ஆய்வு செய்து அதில்தான் போட்டியிடுவர். அதன்படி, 2026 சட்டமன்றத் தேர்லில் விஜய் எந்த தொகுதியில் போட்டியிடப் போகிறார் என கேள்வி எழுந்தது. இந்நிலையில், நாகப்பட்டினம் அவரது முதன்மை விருப்பம் எனவும், அடுத்தடுத்த இடங்களில், அரியலூர், தூத்துக்குடி ஆகிய தொகுதிகள் உள்ளதாக தகவல் வெளியாகிறது.

Read More : குடையை மறந்துறாதீங்க..!! தமிழ்நாட்டில் இன்று 7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..!! வானிலை ஆய்வு மையம் வார்னிங்..!!

Tags :
தமிழக வெற்றிக் கழகம்தவெகமுதல்வர் பதவிவிஜய்
Advertisement
Next Article