For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ஃபேஷன் வீக்கில் பொலிவிழந்த ஐஸ்வர்யா ராய் முகம்.! பின்னணியில் ஸ்டெராய்டு இன்ஜெக்ஷன் மர்மம்.!

05:58 AM Nov 29, 2023 IST | 1newsnationuser4
ஃபேஷன் வீக்கில் பொலிவிழந்த ஐஸ்வர்யா ராய் முகம்   பின்னணியில் ஸ்டெராய்டு இன்ஜெக்ஷன் மர்மம்
Advertisement

நடிகை ஐஸ்வர்யா ராய் இந்தியாவின் பேஷன் ஐகானாக விளங்கி வருபவர். இவர் 1994 ஆம் ஆண்டு உலக அழகி பட்டம் வென்ற பிறகு மணிரத்தினம் இயக்கிய இருவர் திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து பல பாலிவுட் வெற்றி படங்களில் நடித்த இவர் இந்தியாவின் மிகப்பெரிய நடிகையாக உயர்ந்தார்.

Advertisement

சில நாட்களுக்கு முன்பு தமிழ் சினிமாவில் வெளியாகி வெற்றி பெற்ற பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்திலும் நடித்திருந்தார். இவர் உலகெங்கிலும் நடைபெறும் ஃபேஷன் ஷோ மற்றும் திரைப்பட விழாக்களில் கலாச்சார தூதுவராக கலந்து வருகிறார். திரைப்பட விழாவில் சிவப்பு கம்பள வரவேற்பு இவருக்கு எப்போதும் உண்டு.

சமீபத்தில் பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் நடைபெற்ற ஃபேஷன் விழாவில் இவர் கலந்து கொண்ட போது அவரது முகம் சற்று வீங்கி காணப்பட்டது. இதற்கு ஐஸ்வர்யா ராய் பயன்படுத்தி வரும் ஸ்டெராய்டு ஊசி தான் காரணம் என ஒரு தகவல் வேகமாக பரவி இருக்கிறது. இந்த ஊசியை பயன்படுத்துவதன் மூலம் முகத்தில் இருக்கக்கூடிய சுருக்கங்கள் சில மணி நேரங்களுக்கு தெரியாமல் இருக்கும். இதற்காகத்தான் ஐஸ்வர்யா ராய் அந்த ஊசியை பயன்படுத்துவதாகவும் இதன் காரணமாகவே அவரது முகம் வீங்கி இருப்பதாகவும் சில தகவல்கள் வெளியாகின

சில காலங்களாக முகத்தில் இருக்கும் சுருக்கங்களை மறைப்பதற்கு அதிகப்படியான மேக்கப் பயன்படுத்துவதாக அவர் மீது ஒரு சர்ச்சை எழுந்தது. இதனைத் தவிர்ப்பதற்காகவே அவர் ஸ்டெராய்டு ஊசிகள் பயன்படுத்துவதாகவும் அந்த ஊசிகளின் பக்க விளைவினால் விழாவின் போது அவரது முகம் வீங்கி இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. பொடெக்ஸ் என்று அழைக்கப்படும் அந்த ஸ்டெராய்ட் ஊசிகள் பயங்கரமான பக்க விளைவுகள் கொண்டது எனவும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

Tags :
Advertisement