கஞ்சா வியாபாரிகளுடன் நெருக்கம்..!! நடிகர் மன்சூர் அலிகானின் மகன் அதிரடி கைது..!! சிறையில் அடைக்க போலீஸ் திட்டம்..!!
நடிகர் மன்சூர் அலிகானின் மகன் அலிகான் துக்ளக் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜே.ஜே. நகர் போலீசார் தனியார் கல்லூரி மாணவர்கள் உட்பட 10 பேரை கைது செய்தனர். அவர்களிடம் கஞ்சா மற்றும் கோகைன், கஞ்சா மாத்திரைகள் இருந்தது தெரியவந்தது. போதை பொருள் ரெடிட் என்ற அஃப் மூலமாக இவர்கள் வாங்கி விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதில் முக்கிய நபரான கார்த்திகேயனை விசாரித்தபோது, நடிகர் மன்சூர் அலிகானின் மகன் துக்ளக் அலிகானுக்கும் இவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
மன்சூர் அலிகானின் மகன் அவரது நண்பர்கள் என மொத்தம் 7 பேரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. ஒரு நாட்கள் முழுவதுமாக விசாரணை நடத்தப்பட்டு, அவர்கள் வாங்கியுள்ளார்களா..? அல்லது போதைப் பொருளை பயன்படுத்தியுள்ளார்களா..? என பரிசோதனை நடத்தப்பட்டது. இதில், மன்சூர் அலிகானின் மகன் துக்ளக் அலிகான் உள்பட அவரது நண்பர்கள் 3 பேர் என 4 பேர் போதைப்பொருளை பயன்படுத்தியிருப்பதும், வாங்கியிருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து, நான்கு பேரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், மன்சூர் அலிகான் மகன் யார் யாரிடம் போதை பொருள் வாங்கினார் என்பது தொடர்பான விவரங்களை சேகரிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.