முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

இளம்பெண் குளிப்பதை வீடியோ எடுத்த துப்புரவு பணியாளர்..!! தனது அந்தரங்க உறுப்பை வைத்து ஆபாசமான செயல்..!!

Along with taking videos, he also performed obscene acts with his private parts.
12:15 PM Oct 05, 2024 IST | Chella
Advertisement

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திற்கு சொந்தமான குடியிருப்பு வளாகத்தில் பேராசிரியர் ஒருவர் புதிதாக திருமணமான நிலையில், தனது மனைவியுடன் குடிபெயர்ந்துள்ளார். இந்நிலையில், இவரது மனைவி குளித்துக் கொண்டிருப்பதை துப்புரவுத் தொழிலாளி ஒருவர் மறைமுகமாக செல்போனில் வீடியோ எடுத்துள்ளார்.

Advertisement

இதை சுதாகரித்துக் கொண்ட பேராசிரியரின் மனைவி அலறியடித்து கூச்சலிட்டதால், சத்தம் கேட்டு அந்த பகுதியில் இருந்த பாதுகாப்பு படையினர் உடனடியாக அங்கு விரைந்தனர். பின்னர், துப்புரவு பணியாளரைப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். காவல்துறையின் கூற்றுப்படி, பாதிக்கப்பட்டவர் ஜேஎன்யு வளாகத்தில் அமைந்துள்ள குளியலறையில் குளித்துக் கொண்டிருந்தார். குற்றம் சாட்டப்பட்ட துப்புரவு பணியாளர் அங்கு சென்று குளியலறையின் ஜன்னல் வழியே செல்ஃபி ஸ்டிக் உதவியுடன் வீடியோ எடுத்துள்ளார்.

வீடியோ எடுப்பதோடு, தனது அந்தரங்க உறுப்புகளையும் வைத்து ஆபாசமான செயல்களைச் செய்துள்ளார். ஜன்னல் வழியே தான் குளிப்பதை ஒரு செல்போன் பதிவு செய்துக் கொண்டிருப்பதைப் பார்த்து இளம்பெண் அலறி கூச்சலிட்டதால் இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

போலீசாரின் விசாரணையில், கைதானவர் ஜேஎன்யுவில் ஆசிரியர் அல்லாத ஊழியராக பணிபுரிவது தெரியவந்தது. தற்போது, ​​குற்றவாளியின் மொபைல் போனை பறிமுதல் செய்த போலீசார், அவர் வேறு எந்த பெண்ணின் வீடியோவை எடுத்து வைத்திருக்கிறாரா..? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றவாளியின் செல்போனை ஆராய்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Read More : ’குதிச்சிருடா கைப்புள்ள’..!! பைக்கை தூக்க வந்த பைனான்ஸ் ஊழியர்..!! விரட்டி அடித்த உரிமையாளர்..!! குளத்தில் குதித்த பரிதாபம்..!!

Tags :
அந்தரங்க வீடியோஆபாச வீடியோதுப்புரவு பணியாளர்
Advertisement
Next Article