மண் பானை Vs செம்பு பாத்திரம் - எந்த தண்ணீர் சிறந்தது?
மண் பானை மற்றும் செம்பு பாத்திரம். இந்த இரண்டில் எதில் வைத்து குடிக்கும் தண்ணீரில் நிறைய நன்மைகள் இருக்கின்றன என்பது குறித்து தெரிந்து கொள்வது அவசியம்.
கோடைக்காலம் தொடங்கிவிட்டது. வெயில் வாட்டி வதைக்கிறது. இந்த நேரங்களில் நாம் அதிகளவில் தண்ணீர் குடிப்பது அவசியம். செயற்கையான முறையில் பிரிட்ஜில் வைத்து தண்ணீரை குடிப்பதற்கு பதில் மண் பானையில் வைத்த நீர் மற்றும் செம்பு பாத்திரத்தில் வைத்த நீரை அருந்துவது சிறந்தது என்று சொல்லப்படுகிறது. இதில் என்னென்ன நன்மைகள் உள்ளன என்பது குறித்தும் தெரிந்துகொள்ளலாம்.
செம்பு பாத்திர தண்ணீரின் பயன்கள்: அமெரிக்கன் கேன்சர் சொசைட்டி அறிக்கையின் படி, செம்பு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து குடிக்கும் போது உடலில் உள்ள கெட்ட கொலஸ்டிரால் குறைவது தெரியவந்துள்ளது. குறிப்பாக உடலுக்குத் தீங்கு செய்யக்கூடிய டிரை கிளிசரைடுகளை குறைத்து இதய நோய் ஆபத்துக்களைத் தடுக்கும் என்று கூறப்படுகிறது. புற்றுநோய் ஆபத்தை தடுக்கும். மேலும் செம்பு பாத்திரத்தில் தண்ணீர் வைத்துக் குடிக்கும்போது உடலின் செயல்திறன் மேம்படும். குறிப்பாக, நாம் உண்ணும் உணவுகளில் உள்ள இரும்புச்சத்தை உடல் முழுமையாக உறிஞ்சிக் கொள்ள உதவும்.
உணவை உடைத்து அதில் உள்ள இரும்புச்சத்து முழுமையாகக் கிடைக்கச் செய்வதால் ஹீமோகுளோபின் ரத்தத்தில் அதிகரிக்கும். இதனால் அனீமியா என்னும் ரத்த சோகை பிரச்னை வராமல் தடுக்க முடியும். இதய ஆரோக்கியம் தான் நம் உடல் நலத்தின் மையமாகச் செயல்படுகிறது. அதை சீராக வைத்துக் கொள்ள உதவி செய்யும்.
செம்பு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து குடிக்கும்போது போதிய காப்பர் சத்து கிடைப்பதோடு ஜீரண மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும். ஜீரண ஆற்றல் அதிகரிக்கும். அது இதய ஆரோக்கியத்தையும் சேர்த்து அதிகரிக்கும்.
காப்பர் பாத்திரத்தில் தண்ணீர் வைத்துக் குடிக்கும் போது அது உடலில் கொழுப்புகள் தேங்காமல் உடைத்து கழிவுகளாக வெளியேற்றி டீடாக்ஸ் செய்ய உதவி செய்யும்.குறிப்பாக டிரை கிளிசரைடுகளும் கெட்ட கொலஸ்டிராலான எல்டிஎல் கொலஸ்டிராலும் சேருவதை தடுப்பதால் உடல் எடை குறையும். உடல் பருமன் பிரச்னை ஏற்படாமல் தடுக்கலாம். காப்பர் பாத்திரத்தில் தண்ணீர் வைத்துக் குடிக்கும் போது அது உடலில் கொழுப்புகள் தேங்காமல் உடைத்து கழிவுகளாக வெளியேற்றி டீடாக்ஸ் செய்ய உதவி செய்யும்.
மண் பானை தண்ணீரின் நன்மைகள்: தண்ணீரை மண் பாத்திரங்களில் ஸ்டோர் செய்து வைத்துக் குடிப்பதன் மூலம் அசிடிட்டி ஏற்படாமல் தவிர்க்க முடியும்.
குறிப்பாக உணவுகளில் உள்ள அமிலததன்மையைக் குறைத்து குடலின் அமிலத்தன்மையை சமநிலையில் வைத்திருக்கச் செய்யும். இதனால் உடலின் பிஎச் அளவு சமநிலையில் இருக்கும்.தண்ணீரை மண் பாத்திரங்களில் ஸ்டோர் செய்து வைத்துக் குடிப்பதன் மூலம் அசிடிட்டி ஏற்படாமல் தவிர்க்க முடியும்.
குறிப்பாக உணவுகளில் உள்ள அமிலததன்மையைக் குறைத்து குடலின் அமிலத்தன்மையை சமநிலையில் வைத்திருக்கச் செய்யும். இதனால் உடலின் பிஎச் அளவு சமநிலையில் இருக்கும்.75 ஆண்டுகளுக்குப் பிறகு கடுமையான வெயில் அடித்துக் கொண்டிருக்கிறது. இதனால் வெப்ப அலைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. இதைக் கட்டுப்படுத்த பல வழிமுறைகளை பின்பற்றுகிறோம்.வெப்ப அலைகளின் காரணமாக சன் ஸ்டிரோக் ஏற்படும் ஆபத்து அதிகம். ஆனால் வெயில் காலத்தில் மண் பானையில் வைத்து தண்ணீர் குடிக்கும்போது சன் ஸ்டிரோக் வரும் ஆபத்து குறையும் என்று கூறப்படுகிறது.
Read More: சற்றுமுன்…! சுற்றுலா சென்ற மினி பேருந்து கவிழ்ந்து விபத்து..! 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம்…!