முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

தமிழகம் முழுவதும் நாளை முதல்... 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு...!

Class 12th original marks certificate will be issued from tomorrow in the respective schools.
05:55 AM Jul 31, 2024 IST | Vignesh
Advertisement

12-ம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ் நாளை முதல் அந்தந்த பள்ளிகளில் வழங்கப்பட உள்ளது‌.

இது குறித்து வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில்; இந்த ஆண்டு பிளஸ் 2 பொதுத் தேர்வெழுதிய தேர்வர்களுக்கு (மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு முடிவு உட்பட) அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் / மதிப்பெண் பட்டியல் 01.08.2024 அன்று முதல் வழங்கப்படும். பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளியிலும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையத்திலும் அசல் (Original Mark Certificates) / மதிப்பெண் (Statement Of Mark) பெற்றுக் கொள்ளலாம். மேலும். விவரங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

Advertisement

மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்விலோ / இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்விலோ அல்லது இரண்டு பொதுத் தேர்வுகளிலுமோ முழுமையாக தேர்ச்சியடையாத மாணவர்களுக்கு, அவர்கள் இரு தேர்வுகளிலும் பெற்ற மதிப்பெண்களை பதிவு செய்து அச்சிடப்பட்ட வழங்கப்படும். ஒரே மதிப்பெண் பட்டியலாக (Statement Of Mark) இம்மாணவர்கள் மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகளில் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்ற பின்னரே, அவர்களுக்கு மேற்காண் இரு தேர்வுகளுக்கான தனித்தனி மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

பழைய நடைமுறையில் (1200 மதிப்பெண்கள்) நிரந்தர பதிவெண் (Permanent Register Number) கொண்டு தேர்வெழுதிய மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வர்கள். இதற்கு முந்தைய பருவங்களில் தேர்ச்சி பெறாத பாடங்களை, மார்ச் 2024 பொதுத் தேர்வில் எழுதி அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்றிருப்பின், அவர்களுக்கு ஒருங்கிணைக்கப்பட்ட அசல் மதிப்பெண் சான்றிதழ்களும், முழுமையாக தேர்ச்சி பெறாதவர்களுக்கு அவர்கள் தேர்வெழுதிய பாடங்களுக்கான மதிப்பெண் சான்றிதழ்களும் வழங்கப்படும்.

நிரந்தர பதிவெண் இல்லாமல் (மார்ச் 2016 பொதுத் தேர்விற்கு முன்னர்) மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வெழுதிய தேர்வர்கள், தற்போது மார்ச்/ஏப்ரல் 2024 பொதுத் தேர்வெழுதி இருப்பின் அவர்கள் தேர்வெழுதிய பாடங்களுக்கான மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

Tags :
12th studentsmark sheetschooltn government
Advertisement
Next Article