For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

கவனம்...! 12-ம் வகுப்பு மாணவர்கள் இன்று 1 மணி முதல் மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கலாம்...!

06:25 AM May 29, 2024 IST | Vignesh
கவனம்     12 ம் வகுப்பு மாணவர்கள் இன்று 1 மணி முதல் மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கலாம்
Advertisement

மறுகூட்டல் , மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் இன்று பிற்பகல் 1 மணி முதல் ஜூன் 1-ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்.

Advertisement

மார்ச் 2024-ம் ஆண்டு 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவர்கள் தங்கள் விடைத்தாள் நகலை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மறுகூட்டல் , மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் இன்று பிற்பகல் 1 மணி முதல் ஜூன் 1-ம் தேதி மாலை 5 மணி வரை , அந்தந்த மாவட்ட அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தினை அதற்கான கட்டணம் செலுத்தி ஒப்படைக்க வேண்டும்.

மார்ச் 2024 , மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு எழுதி விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவர்கள் தங்களது விடைத்தாள் நகலினை www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்குச் சென்று Notification- பகுதியில் HSE Second Year Exam , March 2024 - Scripts Download " என்பதை " Click " செய்தால் தோன்றும் பக்கத்தில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியினை பதிவு செய்து தாங்கள் விண்ணப்பித்த பாடங்களுக்குரிய விடைத்தாள்களின் நகலினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Tags :
Advertisement